ஆரோக்கிய சமையல்: சம்பா ரவை கிச்சடி!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்

சம்பா ரவை கிச்சடி

தேவையானவை:

சம்பா கோதுமை ரவை – ஒரு கப்,

வெங்காயம், கேரட் – தலா ஒன்று,

குடமிளகாய் (நறுக்கியது), பச்சைப் பட்டாணி – தலா ஒரு கப்,

பச்சை மிளகாய் – ஒன்று,

கடுகு – அரை டீஸ்பூன்,

பெருங்காயத்தூள் – சிறிதளவு,

கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்,

கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு,

எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்,

உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

சம்பா கோதுமை ரவையை கடாயில் சிவக்க வறுக்கவும். வெங்காயம், கேரட்டை பொடியாக நறுக்கி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, நறுக்கிய பச்சை மிளகாய் தாளித்து… வெங்காயத்தை போட்டு வதக்கவும், பிறகு கேரட், குடமிளகாய், பச்சைப் பட்டாணியை போட்டு, 3 கப் தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும்.

தண்ணீர் கொதித்ததும் ரவையை சேர்த்துக் கலந்து… கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து மூடி, அடுப்பை ‘சிம்’மில் வைக்கவும். 10, 15 நிமிடம் கழித்து கிளறி இறக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + 2 =