ஆரோக்கிய சமையல்: பச்சை சுண்டைக்காய் சூப்!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
patchai sundaikar - 2026

பச்சை சுண்டைக்காய் சூப்

தேவையானவை:

பச்சை சுண்டைக்காய் – 50 கிராம்,

வேக வைத்த பாசிப்பருப்பு தண்ணீர் – ஒரு கப்,

தக்காளி, வெங்காயம் – தலா ஒன்று,

எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன்,

ச்சை மிளகாய் – ஒன்று,

எண்ணெய் – ஒரு டீஸ்பூன்,

மிளகு – சீரகப்பொடி, உப்பு – தேவையான அளவு.

supe - 2026

செய்முறை:

பச்சை சுண்டைக்காயை நன்கு கழுவி, பின்னர் நசுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, நசுக்கிய சுண்டைக்காயை போட்டு மூழ்கும் வரை தண்ணீர் விட்டு நன்கு வேகவிடவும்.

பிறகு, உப்பு, பாசிப்பருப்பு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கி, மிளகு – சீரகப்பொடி, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கி பரிமாறவும். வயிற்றுப் பூச்சிகளை அழிக்கும் அருமையான சூப் இது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.