நவராத்திரி ஸ்பெஷல்: தேங்காய் பனங்கற்கண்டு பாயசம்!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
coc pan - 2026

தேங்காய் பனங்கற்கண்டு பாயசம்

தேவையானவை:

பச்சரிசி, பனங்கற்கண்டு – தலா ஒரு கப்,

ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை,

முந்திரி, திராட்சை, நெய் – தேவையான அளவு,

தேங்காய் துருவல் – அரை கப்,

பால் – ஒரு கப்.

pan payasam - 2026

செய்முறை:

பச்சரிசியை மிக்ஸியில் சன்ன ரவையாக உடைக்கவும். தேங்காய் துருவலை தண்ணீர் விட்டு மிக்ஸியில் அரைக்கவும். அரிசி ரவையை இரண்டு கப் வெந்நீரில் சேர்த்து நன்கு வேகவிடவும்.

முக்கால் பதம் வெந்த பின்பு… அரைத்த தேங்காய் விழுது, ஏலக்காய்த்தூள், காய்ச்சிய பால், பனங்கற்கண்டு சேர்த்து நன்கு கலக்கவும். நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சையை தூவி அலங்கரித்து, இறக்கி பரிமாறவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.