
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே உள்ள குண்டிருசம் பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன் வயது (40).கூலித்தொழிலாளி இவரது மனைவி ரேவதி (35). இவர்களுக்கு 4 குழந்தைகள் இருக்கின்றனர்.
இந்நிலையில் இவர்களது மகள் ரேவதிக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து காய்ச்சல் பாதித்த ரேவதியை அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ரேவதி அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இதேபோல் கொங்கணாபுரம் கண்ணந்தேரி மேட்டுக்காட்டானூரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 32). கூலி தொழிலாளி . இவரது 3 வயது குழந்தை சபரிகுருவுக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது.
5 நாட்களுக்கு முன்பு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சபரி குரு மேல் சிகிச்சைக்காக கோவையில் தனியார் மருத்துவமனையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சேர்க்கப்பட்டான்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்
. இதனை பார்த்த பெற்றோர் கதறி அழுதனர்.
இதே போன்று வாழப்பாடி பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்ம காய்ச்சல் பாதிப்புக்கு ஒரு சிறுமி உயிரிழந்துள்ளாள்
.இந்த தொடர் மா்மகாய்ச்சல் பாதிப்பால் 3உயிர்கள் பரிதாபமாக இறந்தது. அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.



