தீபாவளி ஸ்பெஷல்: மில்லட் பொரிவிளங்காய் உருண்டை!

Published:

millet - 2026

மில்லட் பொரிவிளங்காய் உருண்டை

தேவையானவை:

ராகி (கேழ்வரகு) – கால் கப்,

கம்பு – கால் கப்,

வரகு – கால் கப்,

கோதுமை – கால் கப்,

கொள்ளு – கால் கப்,

பாசிப்பருப்பு – அரை கப்,

வெல்லம் – ஒரு கப்,

ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்,

சுக்குப்பொடி – கால் டீஸ்பூன்,

நெய் – 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

millet globel - 2026

தானியங்கள் மற்றும் பருப்பை வெறும் வாணலியில் மிதமான தீயில் வாசனை வரும்வரை வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் மாவாக அரைக்கவும். இத்துடன் ஏலக்காய்த்தூள், சுக்குப்பொடி கலந்து வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் கால் கப் தண்ணீர் சேர்த்து வெல்லத்தை கரையும்வரை கொதிக்கவைத்து, வடிகட்டி, மீண்டும் கெட்டியாக பாகு காய்ச்சவும். பாகை அரைத்து வைத்துள்ள மாவில் சேர்த்து நன்கு கலந்து, கையில் நெய்யை தொட்டுக்கொண்டு உருண்டைகளாகப் பிடித்து பரிமாறவும்

ALSO READ:  இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆடி மாத திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

Related articles

Recent articles

spot_img