இந்த ஒரு பொடி போதும்ங்க! மல்டி பர்ப்பஸ்!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
idly podi - 2026

மல்டி பர்ப்பஸ் பொடி

தேவையானவை:

கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு கப்,

எள் – அரை கப்,

காய்ந்த மிளகாய் – 20,

உப்பு, பெருங்காயத்தூள் – தேவையான அளவு,

எண்ணெய் – ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

வெறும் வாணலியில் எள், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை தனித்தனியாக வறுக்கவும். அதே வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாயை வறுக்கவும்.

வறுத்த பொருட்களை ஒன்றாக கலந்து ஆறவிட்டு, பிறகு உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து சற்று கொரகொரப்பாக மிக்ஸியில் அரைக்கவும்.

இந்தப் பொடியை இட்லி, தோசை வகைகளுக்கு தொட்டுக் கொள்ளலாம். பொரியல் வகைகள் செய்யும்போது மிளகாயை தவிர்த்து இந்த பொடியை தூவி இறக்கலாம். இதனுடன் வெங்காயம் சேர்த்து அரைத்து சட்னி செய்யலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.