என்கவுண்டரை பாராட்டி… பின்… கட்சிக்காக பின்வாங்கி… அதான் கம்யூனிஸ்ட்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
cpi leader telangana - 2026

என்கவுன்ட்டர் குறித்து தான் கூறிய கருத்துக்கு சிபிஐ தலைவர் மன்னிப்பு கோரினார். சிபிஐ., தேசியச் செயலர் நாராயணா தெலங்காணா போலீசாரின் என்கவுன்டர் மீது செய்த விமர்சனத்திற்கு மன்னிப்பு கேட்டார்.

கால்நடை மருத்துவர் திசா வழக்கில் குற்றவாளிகள் நால்வரையும் தெலங்காணா போலீசார் என்கவுன்டர் செய்தனர். அதற்கு நாராணா ஆதரவு தெரிவித்து வரவேற்றார். ஆனால் கட்சி நிபந்தனைகளுக்கு மாறாக விமர்சனம் வந்ததாக கட்சியில் சில தலைவர்கள் நாராயணாவின் கூற்றை எதிர்த்தனர்.

கட்சிக் கூட்டத்தில் தன் விமர்சனம் பற்றிய சர்ச்சை எழுந்ததாக சிபிஐ தலைவர் வெளியிட்ட வீடியோவில் குறிப்பிட்டார். தன் விமர்சனம் கட்சிக்கு எதிராக உள்ளதால் மன்னிப்பு கேட்பதாக தெரிவித்தார்.

குற்றவாளிகளை என்கவுண்டர் செய்ததற்காக போலிசாரை நாராயணா பாராட்டியது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவ்வாறு தான் என்கௌன்டரை வறவேற்றது தன் சொந்த கருத்து எனக் கூறி பின்வாங்கினார்.

தன் விமர்சனத்தை திரும்பப் பெற்றுக் கொள்வதாக கூறினார் . இனிமேல் இவ்வாறு நடந்து கொள்ளாமல் தான் கவனமாக இருப்பதாகவும் தெரிவித்தார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.