குழந்தைகளுக்கு ஹெல்தியா இப்படி ஒரு ரொட்டி! உடனே செய்யுங்க ஆன்டி!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
nuts - 2026

ஹெல்தி நட்ஸ் ரொட்டி

தேவையானவை:

கோதுமை மாவு – ஒரு கப்,
பொட்டுக்கடலை, வறுத்த வேர்க்கடலை – தலா கால் கப், முந்திரி, பாதாம் – தலா 10,
நெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

rotti 1 - 2026

பொட்டுக்கடலை, வேர்க்கடலை, முந்திரி, பாதாமை மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.

கோதுமை மாவுடன் உப்பு, அரைத்து வைத்திருக்கும் பொடி, ஒரு டீஸ்பூன் நெய் விட்டு கலந்து, தேவையான தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல பிசையவும்.

இந்த மாவை அரை மணி நேரம் ஊற விடவும். பின்பு மாவை உருண்டைகள் செய்து, சப்பாத்திகளாக இட்டு, தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் நெய் விட்டு நன்கு வேகவிட்டு எடுக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.