ஆரோக்கியமான உணவு: கம்பு இட்லி!

Published:

kambu ma - 2026

கம்பு இட்லி

தேவையான பொருட்கள் :

1 cup- இட்லி அரிசி

1 cup -கம்பு

1/2 cup -உளுத்தம் பருப்பு

1 Tsp -வெந்தயம்

2 Tsp -உப்பு

செய்முறை :

kambu idly - 2026

ஒரு பாத்திரத்தில் அரிசியையும் கம்பையும் எடுத்துக் கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் உளுத்தம் பருப்பு மற்றும் வெந்தயம் எடுத்துக் கொள்ளவும். நன்கு இரண்டு மூன்று முறை கழுவிய பின்னர் தனித்தனியாக மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்.

மூன்று மணி நேரத்திற்குப் பிறகு மாவரைக்கும் இயந்திரத்தை சுத்தமாக தண்ணீர் விட்டு கழுவவும். முதலில் உளுந்தை அவ்வப்போது தண்ணீர் சிறுக சிறுகத் தெளித்து நன்கு உப்பி வரும்வரை அரைத்து எடுத்து ஒரு பெரிய பாத்திரத்தில் மாற்றி விடவும்.

உளுந்து மாவு சிறிதளவு எடுத்து தண்ணீரில் போட்டால் மேலே மிதக்கும். மேலும் மாவின் நிறமும் வெளுத்து வரும். அதுதான் சரியான பதம். பின்னர் அரிசி கம்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

அரைத்த அரிசி சோள மாவை எடுத்து பாத்திரத்திற்கு மாற்றும் முன்னர் உப்பு சேர்த்து ஓரிரண்டு சுற்றுக்கள் சுற்ற விடவும். மாவரைக்கும் இயந்திரத்தை அணைத்து விட்டு உளுந்து மாவு எடுத்து வைத்துள்ள பாத்திரத்தில் எடுக்கவும்.

மாவரைக்கும் இயந்திரத்தில் ஒரு Tbsp அளவு தண்ணீர் விட்டு ஒட்டியிருக்கும் மாவை கழுவி அரைத்து வைத்துள்ள மாவில் சேர்க்கவும். கையினால் நன்கு கலந்து எட்டு மணி நேரம் புளிக்க வைக்கவும். அதாவது முதல் நாள் மாலை மாவை அரைத்து வைத்தால் மறு நாள் இட்லி தயாரிக்கலாம்.

இட்லி பானையில் 3 கப் தண்ணீர் விட்டு சூடாக்கவும்.
இட்லி தட்டின் குழிகளில் ஒரு சொட்டு நல்லெண்ணெய் விடவும். எல்லா இடங்களிலும் பரவும் படி தடவவும்.

மாவை ஒரு குழி கரண்டி கொண்டு நன்கு கலக்கி விடவும்.
இப்போது குழிகளில் மாவை நிரப்பவும். இட்லி பானையில் தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் இட்லி தட்டை உள்ளே வைத்து மூடவும். ஆவியில் எட்டு நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

ALSO READ:  அதிர்ச்சி... அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

குழிகளிலிருந்து இட்லி ஒட்டிக்கொள்ளாமல் எடுக்க ஒவ்வொரு இட்லியின் ஓரத்தை சுற்றி நீர் விட்டு பிறகு தேக்கரண்டியால் எடுக்கவும். தேக்கரண்டியை அடிக்கடி தண்ணீரால் ஈரப்படுத்திக்கொள்ளவும்.

Related articles

Recent articles

spot_img