பத்தே நிமிஷத்துல பட்டுன்னு ரெடியாகும் ரவை சேமியா கிச்சடி

Published:

rava - 2026

ரவை சேமியா காய்கறி கிச்சடி


தேவையானப் பொருள்கள்:

ரவை –ஒரு கப்
சேமியா _2 கப்
சின்ன வெங்காயம் _7 லிருந்து 10 க்குள்
பச்சைப்பட்டாணி -ஒரு கைப்பிடி
கேரட் -1 (சிறியது)
இஞ்சி – ஒரு சிறு துண்டு
பூண்டு – 2 பற்கள்
பச்சை மிளகாய் _2
மஞ்சள் தூள் _1/2 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு
கொத்துமல்லி இலை _ஒரு கொத்து
எலுமிச்சை சாறு _1/2 டீஸ்பூன்

semiya - 2026

தாளிக்க:

நல்லெண்ணெய் _ஒரு டீஸ்பூன்
கடுகு -1 டீஸ்பூன்
உளுந்து -2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு -1 டீஸ்பூன்
சீரகம் -சிறிது
முந்திரி -சிறிது
பெருங்காயம் -சிறிது
கிராம்பு _1
பிரிஞ்சி இலை _1
கறிவேப்பிலை -சிறிதளவு

செய்முறை:

rava semiya veg kithadi 1 - 2026

பச்சைபட்டாணியை முதல் நாள் இரவே ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.

கேரட்டை சிறுசிறு நீளத்துண்டுகளாகவும்,வெங்காயத்தைப் பொடியாக நறுக்கியும்,மிளகாயை நீளவாக்கில் கீறியும் வைக்கவும்.இஞ்சி,பூண்டு தட்டி வைக்கவும்.

ALSO READ:  பழங்குடியினர் சலுகைகள் - யாருக்கு?

ஒரு வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு ரவையைக் கொட்டி சூடு வர வறுத்து தனியாக வைக்கவும்.எண்ணெய் விடுவது ரவையைத் தண்ணீரில் கொட்டிக் கிளறும்போது கட்டி தட்டாமல் இருக்கத்தான்.

அடுத்து அதே வாணலியில் சேமியாவைப்போட்டு சிறிது சூடு வர வறுத்துக்கொண்டு,இதையும் தனியாக வைக்கவும்.

அதே வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடேறியதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாகத் தாளித்துவிட்டு முதலில் வெங்காயம் வதக்கவும்.அடுத்து இஞ்சி,பூண்டு வதக்கிவிட்டு பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.அடுத்து கேரட்,பட்டாணி சேர்த்து வதக்கவும்.நன்றாக வதங்கியதும் ஒன்றுக்கு இரண்டேகால் பங்கு என தண்ணீர் விட்டு,உப்பு,மஞ்சள் தூள் போட்டு கொதி வரும் வரை மூடி வைகவும்.

கொதி வந்ததும் சேமியாவைப் போட்டுக் கிளறவும்.அது பாதி வெந்து வரும்போது ரவையை சிறிது சிறிதாகக் கொட்டி whisk ஆல் விடாமல் கிண்ட வேண்டும்.அப்போதுதான் கட்டித் தட்டாமல் வரும்.எல்லா ரவையையும் கொட்டிக் கிளறிய பிறகு எலுமிச்சை சாறு விட்டுக் கிளறி,கொத்துமல்லி தூவி இறக்கவும்.

சேமியா பாதி வெந்த பிறகுதான் ரவையைச் சேர்க்க வேண்டும்.இரண்டையும் ஒன்றாகச் சேர்த்தால் ரவை வெந்து சேமியா வேகாமல் போகும்.

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உப்புமா வகைகளுக்கேயுரிய‌ தேங்காய் சட்னிதான் இதற்கும் பொருத்தமாக இருக்கும்.

Related articles

Recent articles

spot_img