ஆரோக்கிய சமையல்: முங்தால் மசாலா பராத்தா!

Published:

paratha - 2026

முங்தால் மசாலா பராத்தா
தேவையானவை:

கோதுமை மாவு – 2 கிண்ணம்
பாசிப்பருப்பு – 1/2 கிண்ணம்
தனியாப்பொடி – 1/2 தேக்கரண்டி
காரப்பொடி – 1/4 தேக்கரண்டி
கரம் மசாலா – 1/4 டீஸ்பூன்
சீரகம் – 1/2 தேக்கரண்டி
துருவின இஞ்சி – 1 தேக்கரண்டி
பெருங்காயம் – சிறிதளவு
நறுக்கின கொத்தமல்லி – 3 தேக்கரண்டி

செய்முறை:

பாசிப்பருப்பை இரண்டு மணி நேரங்கள் ஊற விடவும், தண்ணீரை நீக்கி அலசி மின்னரைப்பானில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவுடன் அரைத்த கலவை, உப்பு, சீரகம், தனியாத்தூள், மிளகாய்த்தூள்,கரம் மசாலாத்தூள், இஞ்சித்துருவல், பெருங்காயம், கொத்தமல்லி ஆகியனவற்றைக் கலந்து தண்ணீர் சிறிதளவு விட்டு மாவாகப் பிசையவும்.

இருபது நிமிடங்கள் மாவை ஊற விடவும்.

இப்போது மாவை உருண்டைகளாக உருட்டி மசாலாவை உள்ளே வைத்துப் பரோத்தாக்களாக இடவும், இதையே எண்ணெய் தடவி மடக்கி முக்கோண வடிவிலோ சதுர வடிவிலோ செய்து கொள்ளலாம்.சப்பாத்திக்கல்லில் இட்டதைப் போட்டு இரு பக்கமும் சிவக்க எடுத்து நெய் அல்லது எண்ணெயைத் தடவிப் பரிமாறவும்.

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

Related articles

Recent articles

spot_img