December 5, 2025, 8:50 PM
26.7 C
Chennai

ஜீயருக்கு சம்மன்; இப்போதும் இருக்கிறது இஸ்லாமிய படையெடுப்பின் கோரம்; ஒப்புக் கொண்ட காவல்துறை!

srivilliputhur jeer vanathiseenivasan - 2025

ஜீயருக்கு சம்மன் அனுப்பியுள்ளது காவல்துறை! என்ன நடக்கிறது தமிழகத்தில்?! எஸ்றா சற்குணத்தின் பெயரைக்கூட உச்சரிக்க முடியாத கோழைகள்!

வகுப்புவாத வெறுப்பைத் தூண்ட முயற்சித்ததாக இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுவான அகில இந்திய தவ்ஹீத் ஜமாஅத் (ஏஐடிஜே) நபர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், ஸ்ரீவில்லிபுத்தூர் மணிவாள மாமுனிகள் ஜீயர் மடத்தின் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிக்கு தமிழக காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. .

கடந்த ஜூலை 22ஆம் தேதி, காஞ்சிபுரம் ஆதிஅத்திவரதரின் விக்ரஹத்தை மீண்டும் கோயில் திருக்குளத்தில் மூழ்கடிக்கக் கூடாது என்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் கருத்து தெரிவித்திருந்தார். அதற்குக் காரணமாக அவர் தெரிவித்தது, நாட்டில் இப்போது இஸ்லாமியப் படையெடுப்பின் தாக்கம் இல்லையே! ஏன் அந்தக் காலம் போல் அத்திவரதரை மீண்டும் நீருக்குள் எழச் செய்ய வேண்டும்!? அவர் திருமேனியை கோயிலில் எங்காவது சந்நிதியில் எல்லா நாட்களும் பார்க்கும் வகையில் எழுந்தருளச் செய்யலாமே! – என்று கருத்து தெரிவித்திருந்தார்.

கடந்த காலத்தில் இஸ்லாமிய படையெடுப்பாளர்களிடம் இருந்து விக்ரகங்கள் மறைக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டது; அது திருக்குளத்தில் மூழ்கடிக்கப் பட்டு, பாதுகாப்பது அவசியமானது என்று அன்றைய அன்பர்கள் கருதினர்! ஆனால் இப்போது அப்படி இல்லை. எனவே, 48 நாட்களுக்குப் பிறகு தரிசனத்தின் முடிவில் உள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் திருக்குளத்தில் பெருமான் விக்ரகத்தை மீண்டும் மூழ்கடிக்க வேண்டிய எந்தத் தேவையுமில்லை என்று தனது கருத்தை அவர் நியாயப்படுத்தினார்.

கோயில் திருக்குளத்தில் விக்ரகத்தை திருப்பியும் மறைத்து வைக்கக் கூடாது என்று அதிகாரிகளிடம் வலியுறுத்தி, அனைத்து மடங்களின் தலைவர்களும் முதல்வர் எடப்பாடி கே பழனிசாமியை சந்திக்க திட்டமிட்டதாகவும் ஜீயர் கூறியிருந்தார்.

தற்போது, ​​40 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நிகழும் ஒரு நிகழ்வை தமிழகம் கண்டது. காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் ஆதி அத்திவரதர் தரிசனம் என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வு – வைணவர்களுக்கு மட்டுமல்ல, இந்து ஆன்மிக அன்பர்களுக்கு மிக மிக முக்கியமான நிகழ்வுதான்!

கடந்த 47 நாட்களில் 1 கோடிக்கும் அதிகமானோர் ஆதி அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர், வார நாட்களில் நாள் ஒன்றுக்கு சராசரியாக இரண்டு லட்சம், வார இறுதி நாட்களில் மூன்று லட்சத்திற்கும் அதிகமாக என அத்திவரதரை தரிசித்தனர். நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கில் இருந்தும், வெளிநாட்டிலிருந்தும் கூட அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர், சில நேரங்களில், பக்தர்கள் தரிசனம் செய்ய 10 முதல் 12 மணி நேரத்திற்கு மேல் வரிசையில் காத்திருக்க வேண்டியிருந்தது.

athivarathar old news1 - 2025ஆதிஅத்திவரதர் விக்ரகம், ஒன்பது அடி உயர மூர்த்தி அத்தி மரத்திலிருந்து உருவாக்கப் பெற்ற ஒன்று! இந்த மூர்த்தியே ஆலயத்தின் கருவறையில் 16 ஆம் நூற்றாண்டு வரை அமையப் பெற்று, வணங்கப் பட்டார். 16ஆம் நூற்றாண்டில் இஸ்லாமிய மன்னர்களின் படையெடுப்பின் போது, இந்தக் கோயிலின் விக்ரகத்தையும், செல்வங்களையும் காப்பாற்ற கோவில் அர்ச்சகர்கள், அதிகாரிகள் ஆகியோர் ஆதி அத்திவரதர் மூர்த்தியை மறைக்க முடிவு செய்தனர்.

காரணம், உருவ வழிபாட்டை வெறுத்து, சிலை வணக்கத்தை காபிர்கள் என்று சொல்லி, எங்கெல்லாம் கோயில்கள் உள்ளனவோ அவற்றை அழித்து தரைமட்டம் ஆக்கியவர்கள் இஸ்லாமிய படையெடுப்பாளர்கள் என்பது, இந்திய வரலாற்றில் தெளிவாகப் பதியப் பட்டுள்ளது.

அப்படிப்பட்ட ஒரு மோசமான சூழலில், கோயிலில் இருந்தவர்கள் தங்கள் தெய்வ வழிபாட்டு விக்ரஹத்தை காப்பதற்காக ஆதி அத்திவரதரை கோயிலின் திருக்குளத்தில் மறைத்து வைத்தனர். பல ஆண்டுகளாக, கோயில் மூர்த்தியை திருக்குளத்தில் ரகசியமாக வைத்திருந்த இரண்டு முக்கிய ஆசார்யர்கள் அந்த ரகசியத்தை வெளிப்படுத்தாமல் இறந்து போனதால், மூல மூர்த்தி இருக்கும் இடம் யாருக்கும் தெரியாமல் போனது.

athivarathar poststamp - 2025இந்நிலையில், இஸ்லாமியப் படையெடுப்பின் தாக்கம் குறைந்த நேரத்தில், தேவராஜப் பெருமாளின் விக்ரகம் தேடியும் கிடைக்காமையால், காஞ்சிபுரத்துக்கு அருகே சீவரம் மலையில் இருந்து கல் எடுத்து, வேறு ஒரு மூர்த்தி அதே போல் வடிக்கப் பட்டுள்ளது. இந்த மூர்த்தம், ஆதி அத்திவரதருக்கு பதிலாக நியமிக்கப்பட்டு கருவறையில் வைக்கப்பட்டது. 1709 ஆம் ஆண்டில், கோயில் திருக்குளம் ஏதோ காரணத்தால் வறண்டு, தண்ணீர் இன்மையால், வரதர் மூர்த்தி அதன் வெள்ளி கலசத்தின் கீழ் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு மூர்த்தி 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே வெளியே கொண்டு வரப்பட்டு 48 நாட்களுக்கு பொது தரிசனத்திற்காக வைக்கப்படும் என்று கோயில் அதிகாரிகள் அப்போது முடிவு செய்துள்ளனர்.

இதற்கான கோயில் ஆவணக் குறிப்புகள், கல்வெட்டு, செவிவழிச் செய்திகள் என பல உள்ளன. இதனைத்தான் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் தனது கருத்தில் குறிப்பிட்டார்.

எனவே, தற்போது இஸ்லாமியப் படையெடுப்பின் தாக்கம் இல்லை என்றும், எனவே இடையில் தோன்றிய வழக்கத்தை ஏன் நாம் அப்படியே பின்பற்ற வேண்டும் என்றும் ஒரு கருத்தில் அவர் கூறினார்.

ஆனால், அகில இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் (ஏ.ஐ.டி.ஜே) காஞ்சிபுரம் மாவட்ட பிரிவின் செயலாளர் சயீத் அலி தாக்கல் செய்த மனுவில், அவரது கருத்து சமூக நல்லிணக்கத்தை பாதிப்பதாக குறிப்பிட்டு, அவர் மீது புகார் கூறியுள்ளார்.

இந்தப் புகாரின் அடிப்படையில், ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிஸ்ரீவில்லிபுத்தூர் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப் பட்டுள்ளது. முதலமைச்சரின் சிறப்பு பிரிவில் இயங்கும் ஆன்லைன் போர்ட்டல் மூலம் அலி புகார் அளித்தார். அதற்கு மிகத் தீவிரமாக செயலாற்றி போலீஸார் ஒரு மதத்தின் தலைவரை காவல் நிலையத்துக்கு ஆஜராக அழைத்துள்ளனர்.

athivarathar old news - 2025தமிழகத்தில் இந்துக்களின் மூஞ்சியில் குத்துவிடு, அவனை கிறிஸ்துவத்துக்கு மாற்று என்று வன்முறையைப் பேசி, மதக்கலவரத்தை தூண்டும் விதத்தில் செயல்பட்ட கிறிஸ்துவ பிசப்பு எச்ரா சற்குணத்தை கேள்வி கேட்க முடியாத காவல்துறையும், தமிழக அரசும் ஜீயர் விவகாரத்தில் முந்திக் கொண்டு வந்திருப்பது, ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்ற பழமொழியை மீண்டும் மெய்ப்பித்திருக்கிறது.

இஸ்லாமியப் படையெடுப்பின் கோரமான தாக்கம் இப்போது இல்லை என்று இன்றைய இஸ்லாமிய சமூகத்துக்கு நற்சான்றிதழ் கொடுத்த ஜீயரின் பேச்சு பொய்யாகியிருக்கிறது. இன்றும் இஸ்லாமிய சமூகத்தின் உருட்டலும் மிரட்டலும், ஹிந்து சமூகத்தினரை அச்சமூட்டும் வகையில் செயல்படும் பழைய காட்டுமிராண்டித் தனங்களும் தாங்கள் மாறாமல் கொண்டிருக்கிறோம் என்பதை சிலர் மெய்ப்பித்திருக்கிறார்கள்!

வரலாற்று நிகழ்வை வெளியில் சொல்லக் கூடாது என்று தடை செய்யும் அளவுக்கு தமிழகத்தில் கருத்துச் சுதந்திரம் கொடிகட்டிப் பறக்கிறது!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இஸ்லாமியப் படையெடுப்பாளர் களால் சிதைக்கப்பட்ட சொக்கநாதர் லிங்கத் திருமேனியை பிராகாரத்தில் வரலாற்றுக் குறிப்புகளுடன் வைத்திருக்கிறார்கள். அது வருங்காலத்தில் தமிழக அரசின் அறநிலையத் துறையால் அப்புறப் படுத்தப் படக் கூடும்! இனி பக்தர்கள் தான் 24 மணி நேரமும் காவல் காத்து அந்த வரலாற்று நிகழ்வின் சுவடுகள் மறையாமல் இருக்க வழி செய்ய வேண்டும்! வரலாற்றுக் கல்வெட்டுகளையும் கோயில்களின் சரித்திரங்களையும் பாதுகாக்க பக்தர்கள்தான் தீவிரமாக இருந்தாகவேண்டும்! தமிழக அரசும் அறநிலையத்துறையும் நம்பற்குரியதல்ல! அதைத்தான் இந்த நிகழ்வு நமக்குக் காட்டியிருக்கிறது!


அருள் தரும் அத்திவரதர்| விகாரி வருடம் 2019 | Athi Varadar Special | Sri #APNSwami

வரம் தரும் மரம் | அத்தி வரதர் வைபவம் | Sri #APNSwami #Writes

அருள் தரும் அத்திவரதர்| விகாரி வருடம் 2019 | Athi Varadar Special | Sri #APNSwami

அருள் தரும் அத்திவரதர்| விகாரி வருடம் 2019 | Athi Varadar Special | Sri #APNSwami


 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories