ஏக்கத்தோடு வரும் பிள்ளைங்களுக்கு அருமையா சாக்லேட் சேமியா!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
semiya - 2026

சாக்லெட் சேமியா

தேவையானவை:

பால் – 800 மி.லி,
சாக்லெட் – 75 கிராம்,
சேமியா – 50 கிராம்,
பொடித்த சர்க்கரை – 75 கிராம்,
வெனிலா எசன்ஸ் – 3 சொட்டு.

செய்முறை:

choco vermicelli - 2026

மொத்தம் உள்ள பாலில், முக்கால் பங்கு பாலை காய்ச்சவும். அதில் சேமியாவைப் போட்டு வேக விடவும். மீதி பாலில், ‘சாக்லெட்’டைத் துருவி அதனுடன் சேர்த்து நன்கு சூடாக்கவும்.

மிதமான தீயில் வைத்து சூடாக்கும்போது, சாக்லெட் சீராக உருகும்.

மொத்தமும் உருகி நன்கு கலந்ததும் வேக வைத்த சேமியா – பால் கலவையுடன் சேர்த்து… பொடித்த சர்க்கரை, வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கலக்க, சாக்லெட் சேமியா தயார்!

குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.