ஆரோக்கியமான உணவு: பனீர் ராகி கொழுக்கட்டை!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
panner - 2026

பனீர் ராகி கொழுக்கட்டை

தேவையானவை:

கேழ்வரகு மாவு – ஒரு கப்,
பனீர் துருவல் – அரை கப்,
பொடித்த வெல்லம் – ஒரு கப்,
வறுத்த முந்திரிப் பருப்பு – 10,
வறுத்த வேர்க்கடலை – ஒரு டேபிள்ஸ்பூன்,(உடைத்தது)
நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்.

ragi - 2026

செய்முறை:

கேழ்வரகு மாவை வெறும் கடாயில் வறுத்துக்கொள்ளவும். வெல்லத்தூளை அடிகனமான பாத்திரத்தில் போட்டு 2 கப் நீர் விட்டு கொதிக்க விடவும்.

panni ragi kozhukattai - 2026

வெல்லம் கரைந்ததும் வடிகட்டிக் கொள்ளவும். மீண்டும் வெல்லக் கரைசலை பாத்திரத்தில் ஊற்றி கொதிக்கவிட்டு, பாகு பதம் வந்ததும் வறுத்த முந்திரி, வேர்க்கடலை சேர்த்து, நெய் ஊற்றிக் கிளறவும்.

இதனுடன் கேழ்வரகு மாவு, பனீர் துருவல் சேர்த்துக் கிளறி, வெந்ததும் இறக்கவும். மாவை விருப்பமான வடிவத்தில் கொழுக்கட்டைகளாக பிடித்து, 10 நிமிடம் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.