தென்காசியில் முதல்முறையாக … கொடியேற்றிய ஆட்சியர்! மாவட்டங்களில் குடியரசு தின கொண்டாட்டம்!

tenkasi collector - 2026

நாட்டின் 71வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப் பட்டு வருகிறது. இதை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் மாவட்ட தலைநகரங்களில் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செய்தனர்.

தமிழகத்தின் 33 வது மாவட்டமான தென்காசி மாவட்டத்தில் முதல் குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் கொடி யேற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
தொடர்ந்து காவலர்களுக்கு பாராட்டும் பரிசும் வழங்கிவைத்தார்

tenkasi collector police - 2026

தமிழகம் முழுவதும் நடைபெற்ற 71வது குடியரசு தின விழா கொண்டாட்டம் 71வது குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தேசியக் கொடி ஏற்றினர்.

tenkasi collector police award - 2026
தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் தேசியக் கொடியை ஏற்றி காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டு காவல்துறைக்கு பதக்கங்களை வழங்கியும், பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கு சான்றுக்களை வழங்கினார்.

அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளிலும் குடியரசு தின விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

சென்னை : சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகமான சிங்காரவேலர் மாளிகையில் ஆட்சியர் சீதாலட்சுமி கொடியேற்றி வைத்து காவல்துறையினர் மற்றும் என்சிசி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டார். விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநரே தேசியக் கொடியை ஏற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

ALSO READ:  அதிர்ச்சி... அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

நாமக்கல் : நாமக்கலில் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் தேசியக் கொடி ஏற்றினார். தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் வாரிசுகளுக்கு மரியாதை செய்தார்.

திருச்சி : திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் சிவராசு தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

தேனி: தேனியில் மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தேசியக் கொடி ஏற்றினார். தொடர்ந்து சமாதான புறாக்களையும், மூவர்ண பலூன்களையும் பறக்க விட்டார்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தேசியக் கொடியை ஏற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பதக்கங்களையும் வழங்கினார்.

கடலூர்: கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தேசியக் கொடி ஏற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தேசியக் கொடி ஏற்றினார். தொடர்ந்து காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிவர்களுக்கு பதக்கங்களை வழங்கினார்.

இராமநாதபுரம்: இராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

ALSO READ:  முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

புதுச்சேரி
புதுச்சேரியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, தேசியக் கொடி ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

திண்டுக்கல் :திண்டுக்கல்லில் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்தார். தொடர்ந்து சமாதான புறாக்களையும், மூவர்ண பலூன்களையும் பறக்க விட்டார்.

ஈரோடு : ஈரோட்டில் மாவட்ட ஆட்சியர் கதிரவன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

கோவை : கோவை வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக் கொண்டார்.

புதுக்கோட்டை : புதுக்கோட்டையில் மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி தேசியக் கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

விழுப்புரம் : விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தேசியக் கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

திருவள்ளூர் : திருவள்ளூரில் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தேசியக் கொடியை ஏற்றினார். தொடர்ந்து சமாதானப் புறாக்களையும், மூவர்ண பலூன்களையும் பறக்க விட்டார்.

ALSO READ:  வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்... தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

நெல்லை : நெல்லையில் மாவட்ட ஆட்சியர் ஷில்பாபிரபாகர் சதீஷ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

மதுரை : மதுரையில் மாவட்ட ஆட்சியர் வினய் தேசியக் கொடி ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

நாகை : நாகையில் மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி நாயர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு நினைவு பரிசுகளை வழங்கி மரியாதை செய்தார்.

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் மாவட்ட ஆட்சியர் பிரபாகர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு பதக்கங்களையும் வழங்கினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

Entertainment News

Popular Categories