அழகு குறிப்பு: கூந்தல் பராமரிப்புக்கு…!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
hair

அடர்த்தியாக வளர
தேவையான பொருட்கள்:

கறிவேப்பிலை.

தயிர்.

செய்முறை:

கறிவேப்பிலையை அரைத்து தயிருடன் அரைத்து தலையில் தடவி அரை மணி நேரம் குளிக்கவும். இவ்வாறி வாரம் இருமுறை செய்தால் முடி நல்ல அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும்.

வாரம் ஒரு நாள் :

மிளகிலேயே வால் மிளகு என்று கிடைக்கும் அதனை வாங்கி பயன்படுத்தினால் பொடுகுத் தொல்லையே இருக்காது, சிலருக்கு வெள்ளை வெள்ளையாக செதில் போல் உதிரும். அதனையும் இந்த குறிப்பு போக்கிவிடும்.

வால் மிளகு.

நல்லெண்ணெய்.

செய்முறை:

வால் மிளகை, நல்லெண்ணெயில் காய்த்து வாரம் ஒரு முறை தலைக்கு தேய்த்து 1 மணி நேரம் ஊற வைத்து குளித்து வந்தால் பொடுகு நீங்கும்.

கூந்தல் நீண்டு வளர

சப்பாத்திக் கள்ளி விஷம் என்று சொன்னாலும் அது விஷத்தை முறிக்கவும் பயன்படுகிறது. சப்பாத்திக் கள்ளி மருத்துவம் குணம் நிறைந்தவை. அதன் பூக்கள் கூந்தல் வளர்ச்சிக்கு பயன்படுகிறது.

தேவையான பொருட்கள்:

சப்பாத்திக் கள்ளி பூக்கள்

தேங்காய் எண்ணெய்.

செய்முறை:

சப்பாத்திக் கள்ளியின் சிவந்த பூக்களில் சாறு எடுத்துக் கொள்ளுங்கள். தேங்காய் எண்ணெயில் அந்த சாறை கலந்து எண்ணெயை காய்ச்ச வேண்டும். இதனை தலையில் தேய்த்து வர கூந்தல் அடர்த்தியாக வளரும்.

மரிக்கொழுந்து :

மரிக்கொழுந்து இலையை புதிதாக பறித்து அரைத்து தலையில் தடவி 20 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளிக்க வேண்டும். இப்படி வாரம் ஒரு நாள்: செய்து வந்தால் நாளடைவில் முடி கருமையாக மாறும்.

பொடுகு மறைய :

வேப்பம் பூ பொடுகு, பேனை விரட்டும். அது கிருமிகளையும் அழிக்கும். சருமத்திற்கும் பயன்படுத்தலாம். கூந்தல் வளர்ச்சிக்கும் பயன்படுத்தலாம்.

செய்முறை:

வேப்பம் பூவுடன் வெல்லத்தையும் கலந்து காய்ச்சி தலையில் தேய்த்து குளித்தால் வர பொடுகு நீங்கும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.