October 29, 2021, 2:17 am
More

  ARTICLE - SECTIONS

  நரம்பு சுருட்டலா? எளிய தீர்வு இதோ..!

  vericose

  வெரிக்கோஸ் வெயின் என்ற நரம்பு சுருட்டல் நோய். இது பரம்பரை நோய் என்றாலும் பரம்பரையில் யாருக்கும் இல்லாவிட்டாலும் வருகிறது. இந்த நோய் குறிப்பாக கர்ப்பிணி பெண்கள், ஒரே இடத்தில் இருப்பவர்கள், வாகன ஓட்டுனர்கள், காவல் வேலை செய்பவர்கள், போன்றோர் கவனமாக இருக்க வேண்டும் இவர்களை இந்த நரம்பு சுருட்டல் நோய் தொற்றிக்கொள்ளுமாம்.

  இது பரம்பரை நோய் எனக்கு வராது என எண்ண வேண்டாம் இந்த நோய் மேலோட்டமாக பார்க்கும் போதே கண்டுபிடித்து விட முடிந்தால் இதை உறுதி செய்ய கண்டிப்பாக வைத்தியசாலை சென்று ஸ்கேன் அல்லது x ரே செய்து உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். இன்றைய காலத்தில் தடுக்க அல்லது தவிர்க்க முடியாத நோய்களுக்குள் இந்த நரம்பு சுருட்டல் நோயும் சேர்ந்து கொள்கிறது.

  காரணம் புடவை கடைகளில் வேலை செய்வோர் முழு நாளும் நின்று கொண்டே இருப்பார்கள் ஐந்து நிமிடம் கூட இருக்க முடியாது இவர்களை இந்த நோய் இலகுவாக தாக்க முடியும். அதே போல் தான் பல இடங்களிலும் நடக்கிறது. இந்த நோயை இலகுவாக நீங்கள் கண்டறியலாம் அதாவது தொடைப்பகுதியில் நரம்புகள் சுருண்டு வலி ஏற்படும் அதே போல் சில நேரம் காலிலும் இருக்கும்.

  இரண்டு அடி நடக்கும் போதே வலி உயிர் போகும் சரி இதற்கு என்ன தான் தீர்வு.வைத்தியர்கள் நரம்பு சுருட்டல் தான் என உறுதி படுத்திய பின்னர் இதனை நீங்களே குணப்படுத்திக் கொள்ளுங்கள்.

  பொதுவாக சாதாரண நரம்பில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். ஆனால் வெரிகோஸ் நரம்பில் ரத்தம் பின்னோக்கியும் செல்லும். காரணம் நரம்புகள் ஒன்றோடொன்று பின்னப்பட்டும் திருகியும் காணப்படும்.

  வயது, ஜீன், ரத்த ஓட்டத்தில் பிரச்சனைகள் உடற்பயிற்சி போதிய அளவில் இல்லாமல் இருப்பது, ஹார்மோன் மாற்றங்கள் ஆகியவற்றால் இந்த வெரிகோஸ் பிரச்சனை உண்டாகும். இதனால் பெரும் பாதிப்பு இல்லையென்றாலும் அப்படியே விட்டால் பிரச்சனைகள் தரும்.

  வெரிகோஸ் நரம்பை குணப்படுத்துவது எப்படி?

  தோலுக்கடியில் உள்ள ரத்த நாளங்களில் வலி. தோல் சிவந்து காணப்படும். இதற்கு காரணம் ரத்தம் உறைந்து கட்டி ஆவதே. உள்ளேயே ரத்தநாளம் உடைந்து உள்ளேயே கட்டி நின்று தீரா காரணங்களையும் ஏற்படுத்தி விடும். டிவிடி (deepveinthromfosis) என அழைக்கப்படும் சிறிய ரத்த உறைவுகள் பல ரத்த குழாய்களின் உள் ஒட்டி கொண்டு இருக்கும்.

  இது ரத்தத்தோடு மேல் நோக்கி போய் இருதயம் மற்றும் மூளையில் அடைப்பை ஏற்படுத்த வாய்ப்புண்டு. இதனை அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே உதவியுடன் கண்டறியலாம்.

  vericose
  vericose

  ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் கால்களில், பெருந்தொடையில் இருந்து சிறு தொடை வரை நீளகால் உறை அணிவதன் மூலம் குணம்கிடைக்கிறது. ரத்த குழாய் சிலந்தி வலை போன்று காணப்பட்டால் மைக்ரோஸ்கிளிரோதெரபி எனும் அறுவை சிகிச்சை மூலமும், லேசர், ஆம்புலேட்டரி பிளப்பக்டமி மூலம் குழாய்களை வெட்டி அகற்றியும் சிகிச்சை மூலம் பலன் பெறலாம்.

  மிகத் தீவிரமான வெரிகோஸ் நரம்பு இருந்தால் அதனால் தாங்க முடியாத வலி உண்டாகும். நடக்க முடியாமல் அவதிப்படுவார்கள். ரத்த ஓட்டம் பாதித்து, மரத்தும் போகும். இந்த மாதிரியான தீவிர நிலையில் சரிப்படுத்த அறுவை சிகிச்சை உண்டு.

  மூலிகை சாறு : இதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்று இல்லை. இதனை வீட்டிலேயே மூலிகை சாற்றின் மூலம் குணப்படுத்தலாம். இதனால் பக்க விளைவுகள் ஏதும் இல்லை.

  தேவையானவை :

  ஆப்பிள் சைடர் வினிகர் – 2 ஸ்பூன்
  கேரட் – அரை கப்
  சோற்றுக் கற்றாழை – அரை கப்

  தயாரிக்கும் முறை :

  கேரட்டை பொடிபொடியாக நறுக்கி அதனுடன் கற்றாழையை கலந்து மிக்ஸியில் அரையுங்கள். அதில் சிறிது சிறிதாக ஆப்பிள் சைடர் வினிகரை கலந்து மேலும் அரையுங்கள். க்ரீம் போன்ற பதம் வரும் வரைக்கும் நைஸாக அரைக்க வேண்டும். நீர் கலக்கக் கூடாது.

  எப்படி உபயோகிப்பது :

  இந்த க்ரீம் போன்ற கலவையை வெரிகோஸ் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேய்த்து, காலை மேலே தூக்கி ஏதாவது உயரமான பொருளின் மீது வைத்துக் கொள்ளுங்கள். அரை மணி நேரம் அப்படியே வைத்திருக்க வேண்டும். பின்னர் கழுவலாம். இதனை அந்த நரம்புகள் மறையும் வரை தினமும் உபயோகியுங்கள். நல்ல பலனைத் தரும்.

  வசம்பு, மஞ்சள், துளசி, சமபங்கு எடுத்து சோற்றுக் கற்றாளையில் அரைத்து பூசலாம். இரண்டு மணி நேரம் உலர விட்டு 20 நாள் வரை செய்ய வேண்டும். புங்கன் விதை மற்றும் ஆமணக்கு எண்ணெய் 10 மில்லி உடன் 5 மில்லி தேன் சேர்த்து 30 நாட்கள் சாப்பிட வேண்டும். வலி வீக்கம் இருந்தால் பனிக்கட்டி ஒத்தடம் கொடுக்கலாம்.

  வெரிகோஸ் வெயினை குணமாக்கும் மருத்துவ தீர்வுகள்:

  குப்பைமேனி, வில்வம், நெருஞ்சில், சுண்டைக்காய் மற்றும் சிறிய வெங்காயம் ஆகியவற்றை அரைத்து நரம்புச்சுருட்டல் உள்ள இடத்தில் தடவி வர வேண்டும்.

  மஞ்சள், துளசி, வசம்பு, சோற்றுக் கற்றாழை ஜெல் ஆகிய அனைத்தையும் நன்கு அரைத்து, அதை தொடர்ந்து 2 அல்லது 3 வாரங்கள் நரம்புச் சுருட்டலுக்கு மேல் தடவி வர, நரம்புச்சுருட்டல் வலி குறையும்.

  புங்க எண்ணெய் அல்லது புங்கன்கொட்டை, விளக்கெண்ணெய் மற்றும் தேன் ஆகிய அனைத்தையும் கலந்து, 2 அல்லது 3 வாரங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.

  தினமும் அத்திப்பாலை நரம்புச்சுருட்டல்களுக்கு மேல் தடவி வந்தால், வலி குறைந்து நல்ல பலன் கிடைக்கும்.
  தண்ணீர்விட்டான் கிழங்குகளை நன்கு இடித்து அதன் சாறு எடுத்து அதை தினமும் குடித்து வந்தால், நரம்புச்சுருட்டல் பாதிப்புகள் அனைத்தும் குணமாகும்.

  வெரிகோஸ் வெயின் பாதிப்புள்ளவர்கள் பின்பற்ற வேண்டியவை?

  நீண்ட நேரம் நடப்பது மற்றும் உட்காருவதை தவிர்க்க வேண்டும்.

  உடலுக்கு இறுக்கமான ஆடைகள் மற்றும் குதிகால் உயர்ந்த ஹை ஹீல்ஸ் காலணிகள் அணிவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

  உடல் எடை அதிகமாக இருந்தால், அது நரம்புச்சுருட்டல் உள்ளிட்ட அனைத்து நோய்களை ஏற்படுத்தும். எனவே உடல் எடையை சரியான அளவில் பராமரிக்க வேண்டும்.

  தினமும் முறையான உடற்பயிற்சிகள் செய்து வர வேண்டும் அல்லது இ 20 அல்லது 30 தோப்புக்கரணம் போட்டு வரலாம்.

  தவிர்க்க வேண்டியவை?

  எண்ணையில் பொரித்த பலகாரங்கள், வறுத்த மற்றும் துரித உணவு வகைகள், ஐஸ்க்ரீம், குளிர்பானங்கள், இனிப்புகள், மற்றும் தயிர் ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
  ஊறுகாய் மற்றும் அசைவ உணவுகள் சாப்பிடுவதை கட்டாயம் தவிர்த்து விட வேண்டும்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,138FansLike
  368FollowersFollow
  39FollowersFollow
  74FollowersFollow
  1,593FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-