ஆரோக்கிய சமையல்: வெஜிடபிள் கொழுக்கட்டை!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
veg kozhukattai

வெஜிடபிள் கொழுக்கட்டை

தேவையானவை:
அரிசி மாவு – ஒரு கப்,
முட்டைகோஸ் துருவல், கேரட் துருவல் – தலா கால் கப், கொத்தமல்லி இலை – கால் கப், மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன், நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் – 4 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

கடாயில் தேவையான அளவு தண்ணீர் விட்டு, சிறிதளவு உப்பு சேர்த்து, கொஞ்சம் எண்ணெய் விட்டு கொதிக்கவிடவும். அதில் அரிசி மாவு தூவி கட்டி இல்லாது கெட்டியாக கிளறி எடுத்து வைக்கவும். கடாயில் 2 டீஸ்பூன் அளவு எண்ணெய் விட்டு, சூடானதும் முட்டைகோஸ், கேரட் துருவல், கொத்தமல்லி இலை, இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து சுருள கிளறவும். மிளகுத்தூள் கலந்து இறக்கவும்.

இதுதான் பூரணம். கையில் எண்ணெய் தடவிக் கொண்டு அரிசி மாவு கலவையில் சிறிது எடுத்து உருட்டி, கிண்ணம் போல் செய்து அதில் பூரணம் வைத்து மூடவும். அப்படியே ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.