கொள்ளு வடை
தேவையானவை:
கொள்ளு – 200 கிராம்
பட்டாணிப் பருப்பு (அ) கடலைப் பருப்பு – 100 கிராம்
வெங்காயம் (பொடியாக நறுக்கவும்) – 2
கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை – சிறிதளவு,
சோம்பு – 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 5,
இஞ்சி – பூண்டு விழுது – அரை டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
வெறும் வாணலியில் கொள்ளை சிறு தீயில் வறுத்து எடுக்கவும். ஆறியதும் இத்துடன் பட்டாணி அல்லது கடலைப் பருப்பு சேர்த்து 4 மணி நேரம் ஊறவிடவும்.
பிறகு, தண்ணீரை வடித்து, காய்ந்த மிளகாய், சோம்பு சேர்த்து மிக்ஸியில் தண்ணீர் தெளித்துக் கொரகொரவென அரைத்து எடுக்கவும். அதனுடன் நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, இஞ்சி – பூண்டு விழுது, உப்பு சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், மாவைச் சிறிய உருண்டைகளாக்கித் தட்டிப்போட்டு மிதமான தீயில் வைத்துப் பொரித்தெடுக்கவும். ஆரோக்கியம் நிறைந்த கொள்ளு வடை தயார்.