மஜாவா இருக்கும் இந்த ராஜஸ்தான் அல்வா!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
halwa - 2026

ராஜஸ்தானி அல்வா

தேவையானவை:

பாதாம் – 100 கிராம்
உடைத்த வால்நட்ஸ் – 100 கிராம்
காய்ச்சி ஆறவைத்த பால் – ஒரு கப்
சர்க்கரை – 200 கிராம்
நெய் – 50 கிராம்
குங்குமப்பூ – ஒரு சிட்டிகை
(சிறிதளவு பாலில் ஊறவைக்கவும்)
கோதுமை மாவு – 2 டீஸ்பூன்
ஜாதிக்காய்த்தூள் – அரை சிட்டிகை
சர்க்கரை சேர்க்காத கோவா – 50 கிராம் (துருவவும்)

அலங்கரிக்க

சீவிய பாதாம், பிஸ்தா – சிறிதளவு

செய்முறை:

பாதாம், வால்நட்ஸ் ஆகியவற்றை வெந்நீரில் அரை மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, தோல் நீக்கி மீண்டும் பாலில் எட்டு மணி நேரம் ஊறவைத்து, பாலுடன் சேர்த்துக் கெட்டியாக அரைக்கவும்.

வாணலியில் சிறிதளவு நெய்விட்டு கோதுமை மாவு சேர்த்து வறுத்தெடுக்கவும். அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரையுடன் அரை கப் தண்ணீர்விட்டுக் கொதிக்கவிடவும். சர்க்கரை கரைந்து ஒரு கம்பி பதம் பாகு வந்ததும் அரைத்த பாதாம் – வால்நட் விழுதைச் சேர்த்துக் கைவிடாமல் கிளறவும். கலவை சுருண்டு வரும்போது நெய்யைச் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கிளறவும்.

பிறகு அதனுடன் ஜாதிக்காய்த்தூள், ஊறவைத்த குங்குமப்பூ, கோதுமை மாவு, கோவா சேர்த்துக் கிளறி பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது இறக்கி நெய் தடவிய தட்டில் கொட்டவும். மேலே சீவிய பாதாம், பிஸ்தா தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.

குறிப்பு: இந்த அல்வாவைப் பண்டிகை நாள்களிலும் திருமண வீடுகளிலும் செய்வார்கள். குழந்தைகளுக்குப் பலம் தரக்கூடியது. தேவைப்பட்டால் மேலும் சிறிதளவு நெய் சேர்க்கலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.