ராஜஸ்தான் ஸ்பெஷல்: கட்டே கி புலாவ்!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
Screenshot 2020 0801 174921 - 2026

.

கட்டே கி புலாவ் (Gatte ke Pulav)

தேவையானவை:
பாஸ்மதி அரிசி. – அரை கப்
நெய் – அரை கப்
கடலை மாவு. – ஒரு கப்
சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்
ஓமம். – அரை டீஸ்பூன்
பட்டை – 2 இஞ்ச் நீள துண்டு
பிரிஞ்சி இலை. – 2
கிராம்பு. – 6
பெருங்காயத்தூள். – கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள். – ஒரு டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) – 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள். – அரை டீஸ்பூன்
ஆப்ப சோடா. – அரை டீஸ்பூன்
தயிர். – 2 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் – 2
இஞ்சி விழுது. – 3 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய புதினா – ஒரு கப்
வேகவைத்த பச்சைப் பட்டாணி – ஒரு கப்
நறுக்கிய இஞ்சி – அரை டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு


செய்முறை:
பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி அரை மணி நேரம் ஊறவைத்து இரண்டு மடங்கு தண்ணீர் ஊற்றி குக்கரில் சேர்த்து, 2 அல்லது 3 விசில் வரும்வரை வேகவிடவும். ஒரு அகலமான பாத்திரத்தில் கடலை மாவு, அரை டீஸ்பூன் சீரகத்தூள், அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள், கால் டீஸ்பூன் மஞ்சள்தூள், நறுக்கிய இஞ்சி உப்பு, ஓமம், தேவையான அளவு தண்ணீர் ஆகிவற்றைச் சேர்த்துப் பிசையவும். பிசைந்த மாவை நீளமாக உருட்டி கத்தியால் துண்டுகள் போட்டுக் கொள்ளவும். பிறகு, அடுப்பில் பாத்திரத்தை வைத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி போட்டு வைத்த துண்டுகளை சேர்த்து வேகவிட்டு எடுக்கவும். ஒரு டூத் பிக் கொண்டு உருண்டைகளை குத்திப் பார்த்து வெந்துவிட்டதா என்பதை செக் செய்துகொண்டு பிறகு தண்ணீரை வடித்துவிடுங்கள். இதுதான் கட்டா.

அடுப்பில் வாணலியை வைத்து சேர்த்துச் சூடானதும் வேகவைத்த உருண்டைகளைப் பொரித்து எடுக்கவும். மற்றொரு வாணலியில் சேர்த்துச் சூடாக்கி பட்டை, பிரிஞ்சி இலை, கிராம்பு, ஏலக்காய், பொடியாக நறுக்கிய புதினா, மீதமிருக்கும் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், சீரகத்தூள் சேர்த்துக் கிளறவும். பிறகு, மல்லித்தூள் (தனியாத்தூள்), பெருங்காயத்தூள், இஞ்சி விழுது, பச்சைப் பட்டாணி, ஆப்ப சோடா சேர்த்து பச்சை வாசனை போக கிளறி, ஊறிய பாஸ்மதி அரிசியை சேர்க்கவும். இத்துடன் தேவையான அளவு உப்பு, வேகவைத்த கட்டா உருண்டைகள், தயிர் சேர்த்து கிளறி வேகவைத்து எடுத்தால் கட்டே கி புலாவ் ரெடி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.