சமாஜ்வாதி கட்சி முன்னாள் தலைவர் அமர்சிங் சிங்கப்பூரில் காலமானார்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
amarsingh - 2026

சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் தலைவர் அமர்சிங் சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் காலமானதாக செய்தி வெளியானது. அண்மைக் காலமாக சிறுநீரகம் செயலிழந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார்.

64 வயதான அமர்சிங், கடந்த 6 மாதங்களாகவே சிறுநீரக செயல் இழப்பால் சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சையில் இருந்துள்ளார். ஏற்கெனவே சிறுநீரக செயலிழப்புக்காக கடந்த 2013ஆம் ஆண்டில் துபாயில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அப்போது, சிறிது குணமடைந்து பின்னர் மீண்டும் 2016இல் அரசியலுக்கு வந்தார்.

தற்போதும் மாநிலங்களவை உறுப்பினராக உள்ள அமர்சிங், தற்போது சிறுநீரக செயல் இழப்பின் காரணமாக மரணம் அடைந்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.