ஆரோக்கிய சமையல்: கடலைப்பருப்பு இனிப்பு இட்லி!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
Screenshot_2020_0807_190400

கடலைப்பருப்பு இனிப்பு இட்லி

தேவையானவை:
கடலைப்பருப்பு – 300 கிராம்
பச்சரிசி – 25 கிராம்
கருப்பட்டி. – 300 கிராம்
சோடா உப்பு. – கால் டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் – தேவைக்கேற்ப
ஏலக்காய். – 5

செய்முறை

காலையில் இட்லி செய்ய வேண்டுமென்றால் முந்தினநாள் இரவே அரிசி மற்றும் கடலைப்பருப்பை ஊறவைக்க வேண்டும். காலையில் தண்ணீர் இறுத்து புதுத்தண்ணீர் ஊற்றி ரவை பதத்துக்கு அரைத்துக்கொள்ளவும்.

இத்துடன் கருப்பட்டி மற்றும் ஏலக்காயைச் சேர்த்து இட்லி மாவு பதத்துக்கு கெட்டியாக அரைத்து வைத்துக்கொள்ளவும். பிறகு தேங்காய்த் துருவல், சோடா உப்பு சேர்த்து இட்லித்தட்டில் மாவை ஊற்றி வைத்து, ஆவியில் வேகவைத்து எடுத்தால் கடலைப்பருப்பு இனிப்பு இட்லி ரெடி. இது சுவையான, சத்தான உணவாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.