சதுர்த்தி ஸ்பெஷல்: சிவப்பு அவல் கொழுக்கட்டை!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
Screenshot_2020_0819_160118

சிவப்பு அவல் கொழுக்கட்டை

தேவையானவை: சிவப்பு அவல். – ஒன்றரை கப், வேகவைத்த பாசிப்பருப்பு, வேகவைத்த கடலைப்பருப்பு. – தலா கால் கப், தேங்காய்த் துருவல். – கால் கப், துருவிய இஞ்சி. – ஒரு டீஸ்பூன், உப்பு. – தேவையான அளவு.

தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, எண்ணெய் – சிறிதளவு.

செய்முறை: சிவப்பு அவலை சுடுநீரில் 10 நிமிடங்கள் ஊறவைத்துக் கொள்ளவும். கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும், தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்து, துருவிய இஞ்சி, உப்பு, தேங்காய்த் துருவல் சேர்த்து, வேகவைத்த பருப்புகளை சேர்த்துக் கிளறி, அவலையும் சேர்த்து நன்கு கிளறவும். கையில் சிறிது எண்ணெய் தடவி, அவல் கலவையை எடுத்து, விரும்பிய வடிவில் கொழுக்கட்டைகளாக செய்து, 10 நிமிடம் ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

குறிப்பு: இந்த கொழுக்கட்டைக்கு மேலே டிரை ஃப்ரூட்ஸ் தூவி பரிமாறலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.