கனவின் விளைவு: வாழ்வில் எதிர்பாராத திருப்பம்..

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
dream-1

சமயத் தலைவர்களைத் தரிசிப்பது போலவோ, இவர்களுடைய உபதேசத்தைக் கேட்பது போலவோ கனவு கண்டால், தெய்வபக்தி மேலோங்கும், வருவாய் மிகுதியாகும்.

வானில் சந்திரன் பிரகாசிப்பதுபோல கனவு காணின், லாபங்கள் உண்டாகும். பலரும் விரும்பி நட்பு பாராட்டுவார்கள்.

சந்நியாசம் மேற்கொள்வதுபோல காணும் கனவு, வர இருக்கும் இடையூறு களையும் இன்னல்களையும் குறிப்பிடும். ஆனால், முடிவில் யாவும் நிவர்த்தியாகி நிம்மதியுண்டாகும்.

ஆனாலும், இப்படியொரு கனவை மணம் ஆகாதவர்கள் கண்டால், அவர் இல்வாழ்வில் ஈடுபட மாட்டார் என்று கூறலாம்.

கனவில் சந்தன மரத்தைக் காண்பது நல்லது. வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பம் ஒன்று ஏற்படும். உறவினர்களால் பொருள் உதவி கிடைக்கும்.

கனவில் இந்த பாம்பை கண்டால், தனக்கு எதிரிகள் இருக்கின்றனர் என்று அறிந்து கொண்டு எச்சரிக்கையாக நடந்துகொள்ளவும்.

கனவில் சிவ லிங்கத்தைக் கண்டால் தெய்வ அருளும், செல்வ வசதியும் உண்டாகும்.

கனவில் சிங்கத்தைக் காண்போர், தொழிலில் அல்லது தனது உத்தியோகத்தில் உயர்வு அடைவர்.

சிங்கத்தைக் கண்டு பயந்தாற்போல கனவு கண்டால், யாவும் நஷ்டமாகவே முடியும். உடல்நலனும் பாதிக்கப்படும்.

சிங்கத்தை நாம் கொல்வது போல் கனவு கண்டால், பகைவர்கள் புறம் காட்டி ஓடுவர் என்று கூறலாம்.

சிங்கம் நம்மைக் கடித்து விட்டது போல கனவு கண்டால் ஆபத்து களும், சோதனைகளும், கஷ்டங் களும் உண்டாகும்.

கனவில் சீப்பைக் கண்டால் சிக்கல்கள் உண்டாகும் எனலாம்.

ஆனால், சீப்பால் தலை வாரிக் கொள்வதுபோல கண்டால், காரிய வெற்றி ஏற்படும். நோயாளி ஒருவர் இந்தக் கனவைக் கண்டால், அவருடைய நோய் விரைவில் குணமாகும்.

சூரிய கிரகணம் பிடித்திருப்பதாக கனவு காண்பது கெடுதலானது. தொழில் நஷ்டம் ஏற்படும். அதேநேரம், கர்ப்பிணிகள், சூரிய கிரகணங்கள் தண்ணீரில் பட்டு, பிரதிபலிப்பதாக கனவு கண்டால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தையால் எதிர் காலத்தில் குடும்பம் மிகவும் மேலான நிலையடையும்.

மலர்கள் நிறைந்த செடிகளைக் கனவில் கண்டால், எண்ணிய செயல்கள் யாவும் நிறைவேறும். பழங்கள் நிறைந்த செடியைக் கண்டால், திரவிய சேர்க்கையும், புத்திர சம்பத்தும் உண்டாகும். ஆனால், காய்கள் மட்டுமே உள்ள செடிகளைக் கண்டால் காரியக் கேடும், பொருள் நஷ்டமும் உண்டாகும்.

புத்தம் புதிய செருப்பு அணிந்து கொண்டிருப்பதுபோல கனவு கண்டால் சோதனைகளும், கெடுதிகளும் ஏற்படும்.

கால்களுக்குப் பொருந்தாத செருப்புகளை அணிந்து கொண்டிருப் பதாகவோ, அதனால் கால்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவோ கனவு கண்டால், இல்லற வாழ்க்கையில் இன்பம் இருக்காது.

மிகவும் சோம்பலாக இருப்பது போல காணும் கனவு, நிகழ்கால நிலைமை மாற இருத்தலைக் குறிப்பிடும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.