
மூங்கில் அரிசி ஈஸி புளியோதரை
தேவையானவை:
மூங்கில் அரிசி – 200 கிராம், புளி – சிறிய எலுமிச்சை அளவு, உப்பு, மஞ்சள்தூள் – தேவையான அளவு.
தாளிக்க:
நல்லெண்ணெய்। – 4 டீஸ்பூன், கடுகு। – அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, வறுத்தவேர்க்கடலை। – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை। – சிறிதளவு.
செய்முறை: மூங்கில் அரிசியை 6 மணி நேரம் ஊறவைத்து, உதிரியாக சாதம் வடிக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்துக் காய்ந்ததும் தாளிக்கும் பொருட்கள் சேர்த்துத் தாளித்து, புளியை அரை டம்ளர் தண்ணீ ரில் கெட்டியாக கரைத்துச் சேர்க்க வும். கொதி வந்ததும் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கெட்டியான பின் ஆறவைக்கவும். இதை மூங்கில் அரிசி சாதத்துடன் சேர்த்துக் கிளறிவிட, மூங்கில் அரிசி ஈஸி புளியோதரை ரெடி.