ஆரோக்கிய சமையல்: வரகரசி தாளித்த பொங்கல்!

Published:

varakarasi-pongal

வரகரசி தாளித்த பொங்கல்

தேவையானவை: வரகரசி சாதம். – ஒரு கப், பச்சைப்பருப்பு. – 50 கிராம் (குழைவாக வேகவிட்டது), மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் – தலா அரை டீஸ்பூன், நெய் – 50 கிராம், எண்ணெய் – 25 கிராம், புளிக்கரைசல் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

தாளிக்க:

கடுகு. – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய், பச்சைமிளகாய். – தலா 2, மிளகுத்தூள், சீரகத்தூள் இரண்டும் சேர்த்து – அரை டீஸ்பூன், முந்திரி. – தேவையான அளவு. கறிவேப்பிலை – சிறிதளவு.

செய்முறை: குக்கரில் வைத்த வரகரிசி சாதம் வெந்ததும், அதை அடுப்பிலிருந்து இறக்காமல் அதனுடன் வெந்த பச்சைப்பருப்பு, உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், புளிக்கரைசல், எண் ணெய் அனைத்தையும் சேர்த்து நன்கு சேர்ந்து வருமாறு (பொங்கல் பதம்) கிளறி எடுக்கவும். நெய்யில் தாளிக்கும் பொருட்களைத் தாளித்து இதில் சேர்க்கவும். சுவையான பொங்கல் தயார்.

ALSO READ:  ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

Related articles

Recent articles

spot_img