ஆரோக்கிய சமையல்: சாமை நெல்லிக்காய்ப் புட்டு!

Published:

samai-amla-putu

சாமை – நெல்லிக்காய்ப் புட்டு

தேவையானவை:

வடித்த சாமை சாதம். – ஒரு கப்
நெல்லிக்காய் (சீவியது). – ஒரு கப்
வெண்ணெய். – 2 டீஸ்பூன்
உப்பு. – தேவையான அளவு

வறுத்து அரைக்க:

பொட்டுக்கடலை – கால் கப்
கசகசா. – அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய். – 4
கடலைப்பருப்பு. – 3 டீஸ்பூன்
தனியா. – 2 டீஸ்பூன்

செய்முறை:

வறுத்து அரைக்கக் கொடுத்தவற்றை வெறும் வாணலியில் ஒவ்வொன்றாக வறுத்து, அனைத்தையும் சேர்த்து கொரகொரப்பாகப் பொடித்துக் கொள்ளவும்.

வடித்த சாமை சாதத்தில் துருவிய நெல்லிக்காய், வறுத்து அரைத்த பொடி, உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும். வாணலியில் வெண்ணெய்விட்டு சாதத்தைச் சேர்த்து மெதுவாகக் கிளறி ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு இறக்கினால், சாமை – நெல்லிக்காய் புட்டு தயார்.

Related articles

Recent articles

spot_img