24/09/2020 12:39 AM

கனவின் விளைவு: ஆசிரியரை கண்டால்..!

சற்றுமுன்...

பெயர் சுடலை; த/பெ: கட்டுமரம்! இணையத்தில் கலகலக்கும் திமுக., உறுப்பினர் அட்டைகள்!

இந்த நடைமுறையிலேயே, சமூக விரோதிகள், ரவுடிகள் கட்சியில் சேர்ந்துவிட்டிருக்கிறார்களே என்று கேள்வி கேட்ட போது,

திருமலை திருப்பதியில் ஜகன்மோகன் ரெட்டி!

பஞ்சகச்ச வேஷ்டி கட்டும், நெற்றியில் திருநாமமும் தரித்து ஆந்திர முதல்வர் ஜெகன் ஸ்ரீவாருக்கு பட்டு வஸ்திரங்களை

மதுரை அருகே தே.கல்லுப்பட்டியில் மடைக் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

தே.கல்லுப்பட்டி அருகே தேவன்குறிச்சி ஈஸ்வரப்பேரி கண்மாய் மடையில் கி.பி.13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு,

மோடி பாராட்டிய மோகன்; கந்துவட்டி புகார் பதிந்த அதிமுக., அரசின் போலீஸ்!

மாநில ஆளும்கட்சி பவரைக் காட்டுது; மத்திய ஆளும்கட்சி சும்மா தூங்குது! நொந்துபோன பாஜக., தொண்டர்!
teacher-3

ஆசிரியர் என்பவர் தெரியாத விஷயங்களை மாணவர்களுக்கு கற்று தருபவர். இதற்காக ஆசிரியர்கள் சிறப்பு கல்வியும் பயிற்சியும் பெற்றவர்களாக இருக்கின்றனர்.

அப்படிப்பட்ட ஆசிரியர்களைப் பற்றி பொதுவாக குழந்தைகள் மற்றும் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கனவு வருவது உண்டு. இப்படி கனவு வருவதினால் கிடைக்கும் பலன்களை குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

நீங்கள் மாணவர்களுக்கு அல்லது யாருக்காவது கற்பிக்கும் ஒரு ஆசிரியர் என்று கனவு கண்டால், அந்த கனவு பெரும்பாலும் உங்களுக்குத் தெரிந்த ஒன்றை மற்றவர்களுக்கு கற்றுக்கொடுக்க நீங்கள் விரும்புவதை குறிக்கும் அல்லது உங்கள் அறிவை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள உங்களுக்கு இருக்கும் விருப்பத்தை இது பிரதிபலிக்கிறது.

ஆசிரியராக இருப்பவரை பற்றிய கனவு உங்களுக்கு வந்தால் எதிர்மறையான அர்த்தத்தைக் கொடுக்கும். நீங்கள் மற்றவர்களின் கருத்துகளையும், நம்பிக்கைகளையும் ஏற்க மறுப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். நீங்கள் மற்றவர்களுக்கு ஒரு உண்மையை பற்றி சொல்ல விரும்பினாலும் அவர்கள் உண்மையை அறிய ஆர்வம் காட்டமாட்டார்கள்.

வகுப்பறையிலோ அல்லது வேறு ஏதேனும் சூழ்நிலையிலோ ஒரு ஆசிரியரைப் பற்றி கனவு கண்டால், சில புதிய நபர்களிடம் அறிமுகம் ஆவதன் மூலம் நல்ல முன்னேற்றத்தை அடையலாம். அதாவது நீங்கள் அனுபவிக்கவிருக்கும் ஒரு முழுமையான வாழ்க்கை மாற்றத்திற்கான அறிகுறியாகும்.

நீங்கள் ஆசிரியராக போவது பற்றி கனவு கண்டால், உங்கள் நிபுணத்துவம் வாய்ந்த வேலைகளைத் தவிர வேறு சில பகுதிகளில் கிடைக்க போகும் வெற்றியின் அடையாளமாக இருக்கலாம். இந்த கனவு பெரும்பாலும் உங்கள் தொழிலில் புதிய மாற்றங்களை கொண்டு வருவதற்கான புதிய வாய்ப்புகளின் அறிகுறியாகும்.

கடந்தகால பள்ளி ஆசிரியரைச் சந்திப்பது அல்லது பார்ப்பது போல நீங்கள் கனவு கண்டால் இது உங்கள் அறிவை விரிவுபடுத்துவதற்கும், உங்கள் விருப்பத்திற்கேற்ப உங்கள் கல்வியைத் தொடருவதற்கான அடையாளமாக இருக்கலாம். உங்கள் கடந்தகால பள்ளி ஆசிரியர் அல்லது பேராசிரியர் உங்கள் சக ஊழியரிடமிருப்பது போல நீங்கள் கனவு கண்டால் நீங்கள் கடந்த காலத்தில் செய்த தவறுகளை திருத்தி கொள்ள வேண்டும் என்பதை சொல்கிறது

உங்களை ஆரம்பகாலத்தில் பயிற்றுவித்த முதல் ஆசிரியரைப் பார்ப்பது அல்லது பேசுவது போல நீங்கள் கனவு கண்டால் அந்தக் கனவு உங்கள் எண்ணங்களையும், உங்கள் குழந்தை பருவ நாட்களில் நீங்கள் அடையமுடியாத சில ஏக்கங்களை அடைய நீங்கள் எடுக்கும் திட்டங்களையும், அவற்றை யதார்த்தமாக்குவதற்கான உங்கள் தீர்மானத்தையும் வெளிப்படுத்துகிறது.

தெரிந்தவர் ஆசிரியாராக இருந்தால்
உங்களுக்குத் தெரிந்த ஒருவர் ஆசிரியராக இருந்தால் இது உங்களுக்கு ஒரு மோசமான அறிகுறியாகும். இது பெரும்பாலும் உங்கள் வீட்டில் தேவையில்லாமல் ஏற்பட போகும் குழப்பங்களையும் கருத்து வேறுபாடுகளையும் குறிக்கிறது. இதில் சோகமான விஷயம் என்னவென்றால், ஒரு சில சிறிய செய்திகள் மற்றும் முக்கியமற்ற விஷயங்களால் கூட குடும்பத்திலோ அல்லது நண்பர்களுக்கிடையிலோ பிரச்சனைகள் ஏற்படலாம்.

ஒரு ஆசிரியரை முத்தமிடுவது போல நீங்கள் கனவு கண்டால், அவர்களிடமிருந்து நீங்கள் பெற்ற சில நல்ல ஆலோசனையின் காரணமாக உங்களுக்கு மற்றவர்களிடமிருந்து பாராட்டுக்கள் கிடைக்கும் என்று அர்த்தம். மேலும் ஒரு பெரிய சிக்கலைத் தீர்க்க யாராவது உங்களுக்கு உதவியிருந்தால் அவர்களுக்கு நீங்கள் செலுத்தும் நன்றியின் அடையாளத்தையும் குறிக்கும்.

ஒரு ஆசிரியர் உங்களுக்கு ஏதாவது கற்பிப்பது போல நீங்கள் கனவு கண்டால், அந்த கனவு உங்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க செய்தியை உணர்த்தும். நிஜ வாழ்க்கையில் அந்த நபரை நீங்கள் அறிந்திருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர்களின் போதனைகளை நினைவில் வைத்து கொள்வது சிறந்தது.

ஏனென்றால் அவை ஆழ் மனதில் இருந்து உங்களுக்கு வழங்கப்பட்ட முக்கியமான ஆலோசனைகளாக இருக்கும்.உங்கள் கனவில் வந்த ஆசிரியர் உங்களுக்கு தெரியாதவராக இருந்தால், நீங்கள் சில முக்கியமான முடிவுகளை எடுக்கும் போது நீங்கள் உங்களை நம்பினால் மட்டுமே உறுதியாக எடுக்க வேண்டும்.

மாணவர்களுடன் இருக்கும் ஆசிரியர்
வகுப்பறையிலோ அல்லது வேறு எங்காவது மாணவர்களால் சூழ்ந்திருக்கும் ஆசிரியரைப் பற்றி நீங்கள் கனவு கண்டால், அந்த கனவு பெரும்பாலும் தனிமை மற்றும் உணர்ச்சிவசமான செயல்களுக்கான அறிகுறியாகும். சில காரணங்களால் நீங்கள் மனச்சோர்வையும் , ஏமாற்றத்தையும் அனுபவித்திருக்கலாம், அத்தகைய உணர்வுகளுக்கு நீங்கள் அடிபணியக்கூடாது என்பதனை உணர்த்துவதற்கான அறிகுறியாகும்.

இசை ஆசிரியர் மாணவர்களுக்கு சில இசைப் பாடங்களைக் கற்பிப்பது அல்லது இசைக் கருவியை எவ்வாறு வாசிப்பது என பயிற்றுவிப்பது போல நீங்கள் கனவு கண்டால், அந்த கனவு பெரும்பாலும் உங்கள் சொந்த ஆளுமை திறனை வெளிப்படுத்துகிறது. ஒருவேளை நீங்கள் சில விஷயங்களை மிகைப்படுத்தி உண்மையில் இருப்பதை விட அதை பெரிது படுத்தி உங்களை மிகவும் பெரியவர்களாக காட்ட முயற்சிப்பதை குறிக்கும்.

கலை வகுப்பில் இருக்கும் ஒரு கலை ஆசிரியரைப் பற்றி கனவு கண்டால், அந்த கனவு நீங்கள் உருவாக்கிய சில குழப்பங்களை சரி செய்ய வேண்டும் என்று நினைப்பதை குறிக்கும். மேலும் இந்த கனவு உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட சில குழப்பமான சூழ்நிலைகள் காரணமாக நீங்கள் அனுபவித்த துன்பத்தை குறிக்கலாம். மேலும் உங்கள் மனம் பலவிதமான தேவையற்ற துன்பங்களால் நிறைந்திருக்கலாம். இதனை குறைக்க தேவையான செயல்களுக்கு மட்டும் உங்கள் திறனை பயன்படுத்துவது சிறந்தது.

வேற்று மொழி பேசும் வெளிநாட்டு ஆசிரியர் மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பதைப் பார்ப்பது அல்லது கவனிப்பது போல நீங்கள் கனவு கண்டால், அந்த கனவு வேலை இடத்தில் இருக்கும் சில குழுகள் எடுக்கும் நடவடிக்கைகளில் ஒத்துழைக்க உங்களுக்கு விருப்பம் இல்லாமல் இருப்பதை குறிக்கும்.

இந்த கனவு உங்கள் ஆசைகளையும், நோக்கங்களையும் மற்றவர்களுடன் சரியாக சொல்வதற்க்கு உங்களுக்கு இயலாமல் போவதையும், மேலும் குழுக்களாக இருப்பவர்கள் மற்றும் நண்பர்கள் உங்களை தவறாக புரிந்து கொள்வதையும் குறிக்கும்.

ஒரு நடன ஆசிரியர் ஒரு வகுப்பில் நடனமாடுவது அல்லது மாணவர்களுக்கு சில நடன அசைவுகளைக் கற்பிப்பது போல நீங்கள் கனவு கண்டால், அந்த கனவு ஒரு எச்சரிக்கையின் அடையாளமாக இருக்கலாம்.இந்த கனவு பெரும்பாலும் உங்கள் மனம் மற்றும் உடல்நலம் குறித்த அறிகுறியாகும்.

இது உங்கள் உடல்நலத்தையும், ஆரோக்கியத்தையும் பாதுகாக்க உங்கள் வாழ்க்கையிலுள்ள மோசமான பழக்க வழக்கங்களை மாற்றுவதற்கான எச்சரிக்கையாகும். உங்களை நீங்களே கவனித்துக் கொண்டால், பல தீய விளைவுகள் ஏற்படுவதை தடுக்கலாம்.

தோன்றும்……

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

- Advertisement -
Dhinasari Jothidam ad

உரத்த சிந்தனை

மத்திய அரசின் விவசாய சட்டம்… கருத்துகள் சில..!

அவன் வாயில் பால் ஊற்றி சாகாமலே வைத்து அரசியல் செய்வோம் என கிளம்பியிருக்கின்றன எதிர்கட்சிகள்

சமையல் புதிது.. :

சினிமா...

இந்த கல்யாண வேலைல… இப்ப சமந்தா ரொம்ப பிஸி!

ரகசியமாக அகில் திருமணம். நிச்சயம் செய்த அக்கினேனி ஃபேமிலி. திருமண விஷயத்தில் சுறுசுறுப்பாக சமந்தா.

Source: Vellithirai News

என் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள்:  நடிகர் அஜித் எச்சரிக்கை!

தன்னுடைய பெயரை தவறாக பயன்படுத்தும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.

Source: Vellithirai News

சூரரைப் போற்று … நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவு!

சூரரைப் போற்று திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கில் காவல்துறை நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Source: Vellithirai News

நீட் சூர்யாவிடம்… கேள்விகளை நீட்டாக நீட்டிய மாணவர்கள்! பதில் சொல்லுங்க சார்..!

சூர்யா அவர்கள், பல்வேறு வினாவை “நீட் தேர்வு” சம்பந்தமாக எழுப்பியுள்ளார். அவருடைய கேள்விகளுக்கு பதில்கள்... அடுத்து மாணவர்கள் கேட்கும் சில கேள்விகள்!  Source: Vellithirai News

அப்பா உடற்பயிற்சி செய்கிறார்: எஸ்பிபி சரண்!

பாலு விரைவில் நலமடைந்து வீட்டுக்கு திரும்ப வர வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள். எஸ்பிபி சரண் வெளியிட்டுள்ள வீடியோ இதோ!

செய்திகள்... மேலும் ...

Translate »