உங்க வீட்ல கரப்பான் பூச்சி தொல்லையா?

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
Cauliflower-Spice-Fry-3
Cauliflower-Spice-Fry-3

கரப்பான்பூச்சி நம்ம வீட்டினுள் வராமல் இருக்க சில குறிப்புகள் இதோ…

கிராம்பு
கரப்பான் பூச்சி புழங்கும் இடத்தில் கிராம்பை போட்டு வைக்கலாம் இல்லையென்றால் கிராம்பு எண்ணெயை சிறிது தண்ணீரில் கலந்து ஸ்பிரே செய்யலாம். கிராம்பு வாசனைக்கு கரப்பான் பூச்சி வராது. முக்கியமாக அவ்வப்போது கிராம்பை மாற்ற வேண்டும்.

சர்க்கரை மற்றும் பேக்கிங் சோடா
சர்க்கரை மற்றும் பேக்கிங் சோடாவை பாதிக்கு பாதி கலந்து, கரப்பான் பூச்சி உலவும் இடத்தில் வைக்கலாம், கரப்பான் பூச்சி அந்த இனிப்பை சாப்பிடவரும். சாப்பிட்ட கரப்பான்கள் உடனே இறந்துவிடும்.

உங்க வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லையா?! அப்ப இந்த டிப்ஸ் உங்களுக்குதான்..
பிரியாணி இலை
பிரியாணி இலையை நன்றாக பொடி செய்து, கரப்பான் பூச்சி சுற்றும் இடத்தில் அப்பொடியைத் தூவினால் அந்த வாசனைக்கு கரப்பான் பூச்சி எட்டிப்பார்க்காது.

மிளகு, வெங்காயம் மற்றும் பூண்டு கலவை
மிளகுத் தூள், வெங்காய பேஸ்ட் மற்றும் பூண்டு பேஸ்ட் இந்த மூன்றையும் ஒன்றாக கலக்கவும். தண்ணீர் ஊற்றி ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றவும். இதனை கரப்பான்கள் வசிக்கும் இடங்களில் ஸ்பிரே செய்துவர கரப்பான் தொல்லை நாளடைவில் நீங்கும்.

போரிக் ஆசிட்
கோதுமை அல்லது மைதா மாவை போரிக் ஆசிட் சேர்த்து பிசையவும். இந்த கலவையை சிறு உருண்டைகளாக பிடித்து, கரப்பான் பூச்சி வரும் இடத்தில் வைக்க வேண்டும். இவ்வுருண்டைகளை சாப்பிட்ட கரப்பான்கள், இறந்துவிடும்.

இப்படி செய்தால் கரப்பான் தொல்லையிலிருந்து உங்கள்வீட்டை காப்பாற்றலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.