December 6, 2025, 12:15 AM
26 C
Chennai

தலையில் நீர் கோர்த்துக் கொண்டுள்ளதா? வீட்டு ரெமடி!

The-water-core-on-the-head
The-water-core-on-the-head

ஒரு சிலருக்கு தலையில் நீர் கோர்த்து அடிக்கடி தலைவலி ஏற்படுத்திக் கொண்டிருக்கும். இதற்கு வீட்டிலேயே எளிமையான முறையில் தீர்வு காண முடியும். தலையில் நீர் கோர்த்தால் தலைவலியோடு, தலையும் பாரமாக இருக்கும்.

சரியாக உட்கார கூட முடியாது. எந்த வேலையும் செய்ய முடியாமல் தவித்துக் கொண்டிருப்போம். படுத்தால் போதும் என்கிற நிலைமைக்கு போய் விடுவோம். தலையில் நீர் கோர்த்து கொள்வதற்கு நிறைய காரணங்கள் உண்டு. அதற்கு என்ன தீர்வு என்பதை இந்த பதிவில் அறிவோம் வாருங்கள்.

உங்கள் தலைப்பகுதியில் அதாவது மண்டையோட்டில் அதிக நீர் இருப்பதால் இவ்வாறு பாரமாக உணர்கிறீர்கள். தலைக்குக் குளித்து விட்டு சரியாக தலையை துவட்டாமல் அப்படியே விட்டுவிட்டால் தலைமுடியில் இருக்கும் நீர் மண்டைக்குள் இறங்கிவிடும்.

அப்படி நன்றாகத் துவட்டி இருந்தாலும் தலைக்கு குளித்து விட்டு உடனே தூங்கினால் அப்போதும் இது போல் மண்டையில் நீர் அதிகமாக சேர்ந்து விடும். மன அழுத்தம், ஓய்வின்மை, அதிக வியர்வை போன்றவையும் தலைவலிக்குக் காரணமாக அமையும்.

இதற்கு ஆயுர்வேதத்தில் வீட்டிலேயே எளிமையான பொருட்களை பயன்படுத்தி உடனடியாக தீர்வு காண முடியும். இதற்கு தேவையான பொருட்கள் சுக்கு, மல்லி, மஞ்சள் தூள், மிளகு ஆகிய நான்கு பொருட்கள் மட்டும் இருந்தால் நொடியில் இந்த தலை பாரத்தை போக்கி விடலாம்.

ஒரு வாயகன்ற பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள். கொதிக்கும் அந்த தண்ணீரில் தனியாவை அதாவது மல்லி விதையை போட்டுக் கொள்ளுங்கள். நன்கு கொதித்ததும் இரண்டாவதாக மிளகை சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வையுங்கள். இறுதியாக சுக்கை பொடித்து பவுடராக ஆக்கி கலந்து கொள்ளுங்கள். இவை நன்கு கலந்து கொதித்து தண்ணீரின் நிறம் சிவப்பாக மாறியதும் அடுப்பை அணைத்து கொள்ளுங்கள்.

இப்பொழுது ஒரு பெட்ஷீட் எடுத்து மூடிக் கொண்டு ஆவி பிடியுங்கள். நீங்கள் ஆவி பிடிக்க பிடிக்க உங்கள் முகத்தில் வியர்வை வழியும். வியர்வையை டவல் கொண்டு ஒற்றி எடுத்துக் கொண்டே வாருங்கள். இது போல் குறைந்தது ஒரு இருபது நிமிடமாவது செய்யுங்கள். தண்ணீரின் வெப்பம் குறைந்ததும் நீங்கள் எழுந்து விடலாம்.

20 நிமிடத்தில் உங்கள் தலையில் இருக்கும் மொத்த நீரும் இறங்கி வியர்வையாக முகத்தின் வழியே வெளியேறி விடும். அதற்கு பிறகு பாருங்கள்! உங்கள் தலை பாரம் எங்கே இருக்கின்றது என்று தெரியாத அளவிற்கு நீங்கள் ஆச்சரியப்பட்டு போவீர்கள்! ஒற்றைத் தலைவலிக்கு சுக்கை அரைத்து நெற்றியில் பற்றுப் போடுவார்கள். இவ்வாறு செய்தால் பத்து நிமிடத்தில் ஒற்றை தலைவலி பஞ்சாய் பறந்து விடும்.

பாலில் மஞ்சள் தூள், இடித்த மிளகு, இஞ்சி, சுக்கு இடித்து சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் நுரையீரலில் இருக்கும் சளி நீங்கும். சுவாசிப்பதற்கு சுலபமாக இருக்கும். மேலும் தலைவலியும் நீங்கும். தனியா விதைகளை அரைத்து நெற்றியில் பற்று போட்டால் நெற்றியில் இருக்கும் நீர் ஈர்த்துக் கொள்ளும். அதனால் தலை பாரம் குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

அந்த காலத்திலெல்லாம் தாத்தா மற்றும் பாட்டிமார்கள் வெற்றிலை போடும் பழக்கம் கொண்டு இருப்பார்கள். அவர்கள் வெற்றிலை போட்டுக் கொண்டு காம்பை கில்லி பேத்தி மற்றும் பேரன் மார்களுக்கு கொடுப்பார்கள். வெற்றிலை காம்புகளை மென்று அதன் சாற்றை அவர்கள் விழுங்குவதால் சளி, இருமல் போன்ற தொந்தரவுகள் வராமல் இருக்கும்.

சைனஸ் பிரச்சனை இருப்பவர்களுக்கு அடிக்கடி மண்டையில் நீர் கோர்த்து கொள்வதுண்டு. 5 டீஸ்பூன் தனியாவை 30 நிமிடங்கள் ஊறவைத்து மிக்ஸியில் அரைத்து பற்று போடலாம். இவை இறுக்கி பிடிக்க பிடிக்க மண்டயை சுற்றி இருக்கும் நீரை இழுக்கும் தன்மை கொண்டது.

தனியா விதைகள் இல்லாதவர்கள் தனியாவுக்கு மாற்றாக கொத்துமல்லித்தழையை நீர்விடாமல் அரைத்து சாறு பிழிந்து தலையில் பற்று போடலாம். மாலை வேளையில் இந்த பற்று போடலாம். இரவு நேரங்களிலும் தனியாவிதைகள் போடலாம்.

கற்பூரவல்லி. துளசி, வெற்றிலை, சுக்கு, மஞ்சள் சேர்த்து அரைத்து பற்று போட வேண்டும்.

தலைபாரத்தை அவ்வபோது உணர்பவர்கள் தினமும் படுக்கும் போது இந்த பற்றை தலையிலும் முகம் முழுக்க கழுத்து பகுதியிலும் கூட தடவலாம். இதனால் ஒரே நாள் இரவில் மண்டையில் இருக்கும் அத்தனை நீரும் வெளியேறும். மறுநாள் காலை எழும்போதே தலை இலேசாக மாறியிருப்பதை உணரலாம். சளியையும் கரைத்து வெளியேற்றும்.

பொதுவாக ஆண்களை விட பெண்களுக்குதான் முடி அதிகம் என்பதால் தலைக்கு குளிக்கும் போதெல்லாம் மண்டையில் நீர்கோர்வை பிரச்சனைக்கு உள்ளாவார்கள் சிலருக்கு வியர்வை வடிந்தாலும் மண்டையில் இருக்கும் நீர் வடியாது. மாதம் ஒரு முறை சாதாரனமாகவே இந்த பற்றை போட்டு வரலாம். உடனடியாக பாதிப்பில்லாத விளைவை இது தரும்.

யூகலிப்டஸ் இலைகள் கிடைத்தால் அதை நீருடன் சேர்த்து கொதிக்க வைத்து வேப்பிலை, புதினா, துளசி கற்பூர வல்லி இலைகளையும் தலா 10 சேர்த்து ஆவிபிடிக்க வேண்டும். ஆவி பிடித்த பிறகு இரண்டு நாளில் உள்ளிருக்கும் சளி அனைத்தும் வெளியேறிவிடும். சளியை இளக்கி வெளியேற்றும்.

தலைபாரம் இருக்கிறதே என்று தலைக்கு எண்ணெய் குளியலை தவிர்க்க வேண்டாம். நல்லெண்ணெயை இலேசாக சூடுபடுத்தி அதனுடன் தும்பைப்பூ சாறு சேர்த்து தேய்த்துவந்தால் எண்ணெய் குளியலால் குறைபாடு நேராது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories