மச்சம் சொல்லும் மிச்சம்: முதுகில் இருந்தால்..

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
mole 1 - 2026

முதுகில் மச்சம்
முதுகின் வலப்புறம் மச்சம் இருந்தால் பெரிய லட்சியவாதியாக இருப்பார்கள். எப்பொழுதும் சுறுசுறுப்புடன் இயங்குவர். வலப்புறம் மச்சம் உடைய பெண்கள், வேலை செய்து சம்பாதிப்பவர்களாக இருப்பார்கள்.

முதுகின் இடப்புறம் மச்சம் இருந்தால் இளமைப் பருவத்தில் மந்த நிலை ஏற்படும். கல்வி கற்பதில் இடையூறு, முயற்சிகளில் தோல்வி ஏற்படும்.

முதுகில் மச்சம் இருப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகளாகவும், பக்திமான்களாகவும் இருப்பார்கள்.

முதுகின் வலப்பக்கம் தோளுக்கு அருகே மச்சம் உள்ளவர் பயந்த சுபாவம் உள்ளவராக இருப்பார்.

முதுகின் இடப்பக்கம் தோளுக்கு அருகே மச்சம் உள்ளவர் சிறப்பான வாழ்க்கையை பெற்றிருப்பார். தீவிரமாக ஆலோசித்து பிறகு எந்த காரியத்தையும் செய்யும் மனநிலை அவருக்கு இருக்கும்.

முதுகில் மச்சம் இருந்தால் அதிர்ஷ்டக்காரியாக திகழ்வாள்.

வளரும்…….

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.