
சர்க்கரை நோய் நீங்க சித்த மருத்துவம் கூறும் சில அரிய குறிப்புகள் இவை. இந்தக் கைமருந்துகளைப் பயன்படுத்தி, டைப்2 சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம்.
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் உணவுகளில் பாகற்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. தினசரி காலையில் வெறும் வயிற்றில் பாகற்காய் சாறை அருந்தி வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
பழங்கள் மூலமும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த முடியும். சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய பழங்கள் – எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு. இந்த பழங்களில் சிட்ரஸ் அமிலம் இருக்கிறது. அதோடு இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இதனை உண்பதால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். அதோடு உடல் அசதியையும் இந்த பழங்கள் போக்கும். – –
சக்கரை நோயை கட்டுப்படுத்தும் சக்தி வெந்தயத்திடம் உள்ளது. ஆகையால் தினமும் வெந்தயத்தை பொடி செய்து அதை தண்ணீரிலோ அல்லது மோரிலோ கலந்து குடித்து வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். பொடி செய்ய முடியாதவர்கள், ஒரு ஸ்பூன் வெந்தயத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் இரவு ஊறவைத்து காலையில் அந்த நீரையும் வெந்தயத்தையும் உண்ணலாம்.
நாவல் பழத்தின் கொட்டையை உண்பதன் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த முடியும். நாவல் பழ கொட்டையை பொடியாக்கி வெந்நீரில் கலந்து தினமும் குடித்து வர சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.
வெந்தயம் 50 கிராம், சீரகம், ஓமம், கருஞ்சீரகம் ஆகியவை தலா 25 கிராம் எடுத்துக்கொண்டு அனைத்தையும் கலந்து நன்றாக வறுத்து பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் காலையில் வெறும் வயிற்றில் அந்தப் பொடியை ஒரு சிறிய ஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
தினமும் 6 பாதாம் பருப்பை நீரில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் சக்கரை நோயை கட்டுப்படுத்த முடியும். அதோடு நார் சாது அதிகம் நிறைத்த காய்கறிகளை உண்பது நல்லது. உணவில் மஞ்சளை சேர்த்துக்கொள்வதன் மூலம் சக்கரை நோய் கட்டுக்குள் வரும்.
மேலே உள்ள குறிப்புகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி சர்க்கரை நோயை ஆரம்பத்திலேயே கட்டுக்குள் கொண்டு வரலாம். அதோடு நமது உணவு பழக்கத்திலும் சில மாறுதல்களை மேற்கொள்வது அவசியமாகிறது.
ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிடுவதற்கு பதிலாக அதை பிரித்து கொஞ்சம் கொஞ்சமாக ஆறு வேளை சாப்பிடலாம். சாப்பாட்டில் அதிகம் காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம்.
முக்கியமாக கடைகளில் விற்கும் கோதுமை மாவை வாங்கி சப்பாத்தி செய்வதை விடுத்து, நாமே கோதுமையை அரைத்து சப்பாத்தி செய்ய வேண்டும்.