நுங்கு: அழகு மற்றும் ஆரோக்கியத்திற்கு இப்படி பயன்படுத்துங்க…

Published:

palm
palm

நுங்குவின் சதைப்பகுதி 3 டீஸ்பூன், பால் 2 டீஸ்பூன் எடுத்து இரண்டையும் ஒன்றாகக் கலந்து வேர்க்குரு உள்ள இடங்களில் தேய்த்துக்கொள்ள வியர்க்குரு காணாமல் போகும்.

ஓட்ஸ் 5 டீஸ்பூன் எடுத்து வேகவைத்துக்கொள்ளவும். இத்துடன் நுங்கின் சதைப்பகுதி சேர்த்து முகத்தில் பேஸ் பேக் போட்டுக்கொள்ள… கோடைக்காலத்திலும் சருமம் பட்டு போன்று பளபளக்கும்.

தேங்காய் தண்ணீர், நுங்கின் சதைப்பகுதி,கற்றாழையின் சதைப்பகுதி மூன்றும் சம அளவில் எடுத்து மிக்ஸியில் சேர்த்து அரைத்து முகம், கை, கழுத்து போன்ற இடங்களில் அப்ளை செய்து பத்து நிமிடம் கழித்து கழுவ மாசுமருவற்ற சரும அழகைப் பெறலாம்.

2 டீஸ்பூன் முல்தான்மெட்டி, 3 டீஸ்பூன் நுங்கின் சதைப்பகுதி எடுத்து ஒன்றாகக் கலந்து முகத்தில் அப்ளை செய்து 10 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். மாதம் இரு முறை செய்து வர முகத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கி முகம் அழகு பெறும்.

நுங்குவில் உட்பகுதியில் இருக்கும் தண்ணீரை பஞ்சில் நனைத்து முகத்தைத் துடைக்க வெயிலினால் ஏற்படும் டேனிங் நீங்கி முகம் டால் அடிக்கும்.

ALSO READ:  இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆடி மாத திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

நுங்கை இளநீருடன் ஜூஸ் போல அருந்தலாம். சருமமும் உடலும் பொலிவடையும். பதநீரில் இருந்து தயாரிக்கப்படும் கருப்பட்டியுடன், சுக்கு சேர்த்துச் சாப்பிட்டால், நன்றாக பசி எடுக்கும்.

சுக்கு, மிளகு, கருப்பட்டி சேர்த்து, குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டால் தாய்ப் பால் நன்கு சுரக்கும். குழந்தைக்கும் நல்ல ஊட்டச்சத்து கிடைக்கும். நுங்கை மசித்து வியர்க்குரு கட்டிகள் இருக்கும் இடத்தில் பூசினால் விரைவில் சரியாகும். தோலும் மினுமினுப்படையும்.

நுங்கை அரைத்து தேங்காய்ப் பால் சேர்த்துக் குடித்தால் அல்சர், வயிற்றுப்புண் பிரச்சினைகள் தீரும். இப்படி ஏராளாமான நன்மைகள் நுங்கில் இருக்கின்றன

Related articles

Recent articles

spot_img