கனவின் விளைவு: திருமணம் ஆகாத இளைஞனைக் கண்டால்..!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
dream-1
dream-1

திருமணம் ஆகாத ஒரு இளைஞன் நம்முடன் அதிக நேரம் பேசுவது போல் கனவு கண்டால் சந்தோசமான செய்திகள் அடுக்கடுக்காய் நம்மை வந்து சேரும் என்பதை குறிக்கிறது.

திருமணம் ஆனவர்கள் விருந்துண்டு மகிழ்வதாகக் கனவு வந்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதை குறிக்கும்.

மற்றவர்களுக்கு திருமணம் நடைபெறுவது போல் கனவு கண்டால் நீங்கள் திட்டம் போட்டிருக்கும் காரியங்கள் வெற்றிகரமாய் நிறைவேறும் என்பதைக் குறிக்கும்.

ஒரே தொட்டிலில் குழந்தை இருப்பது போன்று கனவு காண்பது குடும்பத்தில் இன்பம் பெருகுவதை குறிக்கிறதுகுழந்தைகளை கனவில் கண்டால் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும் என்பதை குறிக்கிறது.

வக்கீலிடம் சண்டை போடுவது போல கனவு கண்டால் பெரிய ஆபத்தில் சிக்கி கொண்டு திணறுவீர்கள்

நீதிபதியை கனவில் கண்டால் உங்களுக்கு எதிராக வழக்கு தொடுத்தவரே உங்களிடம் சமாதானத்திற்கு வருவார்கள் என்பதைக் குறிக்கிறது

காவல்காரர்களை கனவில் கண்டால் சாதகமற்ற நிலையை உண்டாக்கும்.
காவல் துறையினர் கைது செய்வது போல் கனவில் வந்தால் அடுக்கடுக்கான அசுபச் செய்திகள் வரப்போவதன் அறிகுறியை குறிக்கிறது.

இறந்தவர்கள் உங்களுடன் அல்லது உங்கள் குடும்பத்தினருடன் சாப்பிடுவதுபோல் கனவு வந்தால் புகழும் அதன் மூலம் செல்வங்களும் ஏற்படும்.

இறந்தவர்கள் உங்கள் இல்லத்தில் தூங்குவது போல் கனவு வந்தால் பெரிய ஆபத்தில் இருந்து தப்பிப்பீர்கள் என்பதை குறிக்கிறது.

இறந்தவர்களை கனவில் கண்டால் சுபச்செய்தி வரும் என்பதை குறிக்கிறது.

உங்களிடம் இறந்தவர்கள் பேசுவது போல் கனவு வந்தால் ஆபத்தான நேரத்தில் உங்களுக்கு உதவ சிலர் முன்வருவார்கள் என்பதை குறிக்கும்.

மரணமடைந்தவர்கள் கனவில் வந்தால் நீண்டகாலம் நீங்கள் வாழப்போகிறீர்கள் என்பதைக் குறிக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.