நச்சுன்னு சுட்டிஸ்க்கு செய்து கொடுக்க.. நட்ஸ் தானிய பக்கோடா!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
nuts thaniya pakoda
nuts thaniya pakoda

நட்ஸ் தானிய பக்கோடா

தேவையான பொருட்கள்:
அரிசி மாவு, முளைகட்டிய கொள்ளு, கடலை மாவு – தலா 100 கிராம், முளைகட்டிய பச்சைப் பயறு – 2 டேபிள்ஸ்பூன்,
பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கவும்),
இஞ்சி – ஒரு சிறிய துண்டு (தோல் சீவி, பொடியாக நறுக்கவும்),
பொடியாக நறுக்கிய புதினா இலை – ஒரு கைப்பிடி அளவு,
பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்),
முந்திரிப்பருப்பு – 10 (உடைக்கவும்), வறுத்த வேர்க்கடலை (தோல் நீக்கியது) – ஒரு சிறிய கிண்ணம்,
பாதாம்பருப்பு (ஒன்றிரண்டாக உடைத்துக்கொள்ளவும்) – 10, பெருங்காயத்தூள் – சிறிதளவு, மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்,
வெண்ணெய் – ஒரு டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: அரிசி மாவுடன் முளைகட்டிய கொள்ளு, கடலை மாவு, முளைகட்டிய பயறு சேர்த்துக் கலக்கவும். இதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, புதினா சேர்க்கவும். பின்னர் இவற்றுடன் வெண்ணெய், உப்பு, பெருங்காயத்தூள், மிளகுத்தூளைச் சேர்க்கவும். வறுத்த வேர்க்கடலை, முந்திரிப்பருப்பு, பாதாம் பருப்பையும் மாவுடன் சேர்த்துக் கலக்கவும்.

பிறகு கலவையை நன்கு கிளறி, சிறிதளவு தண்ணீர்விட்டு கெட்டியாகப் பிசையவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி, அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். பிசைந்த மாவைச் சிறிது சிறிதாகக் கிள்ளிப் போட்டு பக்கோடாக்களாகப் பொரித்து எடுக்கவும். சட்னி, சாஸுடன் பரிமாறவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.