அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: காலாணி to காதுவலி!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
health tips 1
health tips 1

கால் ஆணிகள் குணமாக…

அத்தி இலை, துளசி இலை, வேப்பிலை, வில்வ இலை இவற்றைச் சம எடை எடுத்து சிறிது கடுகையும் சேர்த்துக் கஷாயம் வைத்து காலையும் மாலையும் வெறும் வயிற்றில் 50 மி.லி. வீதம் குறைந்த பட்சம் ஒரு மாதமேனும் சாப்பிட்டு வர வேண்டும்.

கிளிமூக்குக் கொன்றையின் இலை. வேர்ப்பட்டை ஆகியவற்றை சமமாக எடுத்து அத்துடன் சிறிது மஞ்சள். கற்பூரம் சேர்த்து அரைத்து ஆணிகளின் மேல் வைத்துக் கட்டிவர நாளடைவில் ஆணிகள் மறைந்து விடும்.

இரண்டு மஞ்சள் துண்டு, ஒரு துண்டு வசம்பு, பத்து கிராம் கற்பூரம். மருதாணி இலை ஆகியவற்றை ஒரு ரூபாய் எடை எடுத்து நான்கையும் அம்மியில் வைத்து நைசாக அரைத்து ஆணிகள் உள்ள இடத்தில் ஒரு வாரம் கட்டி வர ஆணிகள் போன இடம் தெரியாது.

காது வலிக்கு…

ஐந்தாறு வெள்ளைப் பூண்டுகளை நசுக்கி சாறெடுத்து இரண்டு சொட்டுக்களை வலிக்கும் காதில் விட வலி உடனே நின்று விடும்.

குப்பை மேனி இலைக் கஷாயத்தை நாலைந்து துளிகள் காது வலிக்கு ஊற்றினால் உபாதை குறையும். இலைகளை இளஞ்சூடு செய்து காதுப்பகுதிகளில் வேது பிடிப்பதன் மூலமாகவும் இதே குணத்தைப் பெறலாம்.

பச்சைப் பனை மட்டையை நெருப்பில் சற்றுக் காட்டி வதக்கி முறுக்கிப் பிழிய சாறு கிடைக்கும். அச்சாற்றை காதில் விட வலி போன இடம் தெரியாது.

காது குத்தல் இருந்தாலும் சரி, காதில் சீழ் வடிந்தாலும் சரி, முருங்கைப் பிசினை நன்றாக உலர்த்தி இரண்டு மூன்றாக உடைத்து நல்லெண் ணெயில் போட்டுக் காய்ச்சி காதில் சில துளிகள் விட காது நோய் சரியாகி விடும்.

காது வலிக்கும் தொண்டை வலிக்கும் அவரைக் காயின் சாற்றை பயன்படுத்தலாம். அவரைப் பிஞ்சு இரத்தக் கொதிப்பைத் தடுக்கும் என்று சமீப காலத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

காதில் புண்ணா?

காதில் சீழ். புண், புரை ஏற்பட்டால் படிகாரத்தில் பசும்பால் விட்டு ஓட்ட ஒட்ட அரைத்து அடைபோல் தட்டி வெயிலில் வைத்து உலர்த்தி வைத்துக் கொண்டு பிறகு அதனை பொடி செய்து வெந்நீரில் கரைத்து இரண்டு மூன்று துளிகள் காதில் விட உடனடி குணம் தெரியும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.