அலையும் மனம் இதுக்கு.. மலையாள கடிகார அடை!

Published:

Wheat Fred Siali Malayalam Clock
Wheat Fred Siali Malayalam Clock

மலையாள கடிகார அடை

தேவையானவை:
பச்சரிசி, துவரம் பருப்பு – தலா ஒரு கப், தேங்காய்த் துருவல் – அரை மூடி,
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு, பெருங்காயத்தூள் – சிறிதளவு,
காய்ந்த மிளகாய் – 8,
சீரகம் – ஒரு டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் – ஒரு கப்,
புளி – சிறிய நெல்லிக்காய் அளவு.

செய்முறை:
சுடுநீரில் அரிசி, பருப்பை 15 நிமிடம் ஊறவைக்கவும். பிறகு, கொடுக்கப்பட்டுள்ள பொருட்களில் எண்ணெய், நறுக்கிய வெங்காயம் தவிர்த்து மற்ற எல்லாப் பொருட்களையும் ஊறவைத்த அரிசி, பருப்புடன் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். மாவை சூடான தோசைக்கல்லில் சிறு சிறு அடைகளாக ஊற்றி, வெங்காயத்தை தூவி எண்ணெய் ஊற்றி மொறுமொறுப்பாக வேக விட்டு பரிமாறவும்.

Related articles

Recent articles

spot_img