அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு! நரம்பு கோளாறு, நகச்சுற்று, நரம்பு சிலந்தி..!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
health tips 1
health tips 1

நரம்புக் கோளாறு குணமாக…

முற்றிய வேப்பிலையை சுத்தம் செய்து சுண்டைக் காயளவு கஷாயம் வைத்து ஒரு வாரம் சாப்பிட நல்ல குணம் தெரியும்.

வசம்பைத் தூளாக்கி 2 அல்லது 3 கிராம் வாயில் போட்டு சுவைத்து வெந்நீர் குடிக்க நரம்புத் தளர்ச்சி, துர்பலம் நீங்கும்.

நரம்புச் சிலந்தி குணமாக..

பெருங்காயத்தை வாழைப்பழத்தில் வைத்துச் சாப்பிட நரம்புச் சிலந்தி குணமாகும்.

அவுரி இலை, அவுரி வேர்ப்பட்டை, பொரித்த பெருங்காயம் சம அளவு எடுத்து மை போல நன்கரைத்து சுண்டைக்காயளவு மாத்திரைகளாக உருட்டி வைத்துக் கொண்டு தினம் வேளைக்கு ஒரு மாத்திரை
வீதம் மூன்று வேளை சாப்பிட்டு வர விரைவில் குணமாகும்.

நல்ல உறக்கத்துக்கு…

பாலைக் காய்ச்சி அதில் கசகசாப் பொடியைக் கவந்து படுக்கப் போகுமுன் சாப்பிட நல்ல தூக்கத்தைத் தரும். உடல் ஆரோக் கியத்தையும் தரும்.

நட்டுவாக்களி கடித்து விட்டால்…

உடனே தேங்காயை மென்று சாப்பிடவும். தேங்காய்ப் பாலையும் உள்ளுக்குச் சாப்பிடலாம். உடனே விஷம் இறங்கி விடும்.

நகச் சுற்றுக்கு…

கொழுந்து வெற்றிலையில் சுண்ணாம்பை தாராளமாகத் தடவி அதை அப்படியே அரைத்து நகத்தைச் சுற்றி வைத்துக் கட்ட குணமாகும்.

தும்பைச் செடியின் துளிர், துளசி இலை இவற்றைச் சம பங்கு எடுத்து அரைத்து வைத்துக்கட்டலாம். வெற்றிலைக் காம்பை அரைத்து வைத்துக் கட்டினாலும் நல்ல குணம் தெரியும்.

பறங்கிச் சக்கையை எலுமிச்சம் பழ ரசத்தில் இழைத்து நகச்சுற்றின் மீது பற்றுபோட இரண்டொரு நாள்களில் சரியாகி விடும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.