TNCSC : காத்திருக்கும் பணிகள்!

Published:

TNCSC
TNCSC

தமிழக அரசிற்கு உட்பட்டு நாகப்பட்டினம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் காலியாக உள்ள எழுத்தர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்தம் 304 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு 8, 12-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயனடையலாம்.

நிர்வாகம் : தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (TNCSC)

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 304

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :

பருவகால பட்டியல் எழுத்தர் – 119 பணியிடங்கள்
பருவகால உதவுபவர் – 127 பணியிடங்கள்
பருவகால காவலர் – 58 பணியிடங்கள்
கல்வித் தகுதி :

பருவகால பட்டியல் எழுத்தர் – ஏதேனும் ஒரு இளநிலை அறிவியல் (B.Sc) பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பருவகால உதவுபவர் – 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

பருவகால காவலர் – அரசு பாடத்திட்டத்தில் 8ம் வகுப்பு தேச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர் 18 வயது முதல் 32 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
ஊதியம் : ரூ.4,049 மாதம்

விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்களது பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை 10.11.2021 தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

முதுநிலை மண்டல மேலாளர்‌, தமிழ்நாடு நுகர்பொருள்‌ வாணிபக்‌ கழகம்‌, நாகப்பட்டினம் மண்டல அலுவலகத்தில் அலுவலக வேலை நாட்களில் 10.11.2021 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப படிவம்‌ மண்டல அலுவலகத்தில்‌ அலுவலக வேலை நாட்களில்‌ இலவசமாக பெற்றுக்‌ கொள்ளலாம்‌.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினப் பெறவும் www.tncsc.tn.gov.in அல்லது கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

Related articles

Recent articles

spot_img