பால் சுரப்பு நிற்க…
தாய்ப்பால் சுரப்பை நிறுத்த வேண்டுமாளால் வேப்பிலைகளை ஸ்தளங்களில் வைத்துக் கட்டினால் பால் வறண்டு போகும். மல்லிகைப் பூவையும் வைத்துக் கட்டலாம். பால் சுரப்பு நிற்பதுடன் வலியும் குணமாகும்.
பாரிச வாயு குணமாக…
பாரிசவாயு கண்ட மூன்று நாள்களுக்குள் இந்த வைத்தியத்தைச் செய்தால் குணம் காணலாம் வயது முதிர்ந்த வேப்பமரத்தின் பட்டையைக் கொண்டு வந்து கஷாயம் வைத்து சாப்பிட வேண்டும்.
அவ்வப்பொழுது பச்சை வெண்டைக்காயை மென்று சாப்பிடச் சொல்லி இதையும் சாப்பிட ஒரு வாரத்தில் ஓரளவு குணம் தெரியும்.
பித்தம் நீங்க…
ஆரைக்கீரையை குறைந்த பட்சம் நாற்பது நாள்களுக்கு சமைத்து சாப்பிட பித்த சம்பந்தமான எல்லா நோய்களும் நீங்கும். அளவுக்கு மீறி இறங்கும் சிறுநீரையும் கட்டுப்படுத்தும்.
அன்னாசிப் பழத்தை தினமும் பகல் உணவிற்குப் பிறகு 50 கிராம்
அளவு சாப்பிட்டு வர நல்ல குணம் தெரியும். தொடர்ந்து இரண்டு
மூன்று வாரங்கள் சாப்பிட்டு வர வேண்டும்.
பித்த நோய் ஏற்பட்டால் உள்ளங்கையில் தோல் உரியும். இஞ்சி சாற்றுடன் வெல்லத்தைக் கரைத்து உள்ளுக்குச் சாப்பிட கை கால்களில் தோல் உரிவது நின்று விடும்.
கிச்சலி பழத்தோலை நன்கு உலர்த்தி இடித்துத் தூள் செய்து இரண்டு
கிராம் அளவு தூளும் சம அளவு சர்க்கரையும் சேர்த்து வெந்நீரில் குடித்து வர மாந்தம், வாந்தி, துர்பலம் நீங்கி பசியை உண்டாக்கும். பித்தச் சாந்தி செய்து நோய்களைக் கண்டிக்கும்.
வாழைக்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் பித்தம் அகலும் இருமல் குறையும். வாந்தியை நிறுத்தும் வாழைக்காயுடன் மிளகு.
சீரகம் சேர்த்துக் கொண்டால் வாயுத் தொல்லை ஏற்படாது.
பித்தம் அதிகமானால் வாய் கசக்கும். எலுமிச்சம்சாறு. உப்பு சேர்த்து கரைத்து வடிகட்டி அதில் இஞ்சியை தோல் நீக்கி சிறுசிறு துண்டு சுளாக்கி ஊற வைத்து காலை. மாலை சில இஞ்சித் துண்டுகளை மென்று சாப்பிடி வாய்க்கசப்பு நீங்கும்.
பிடரி வலிக்கு…
கரு நொச்சி இவைகளை தலையணையின் மேல்பரப்பி தலைவைத்து படுத்துறங்க பிடரி வலி நீங்கும்.
புளியேப்பம் நீங்க…
அன்னாசிப் பூவை உலர்த்தி இடித்துப் பொடி செய்து ஒரு சிட்டி கையளவு நாள்தோறும் காலை, மாலை சாப்பிட்டு வர புளியேப்பம் நீங்கும். பலவீனம் நீங்கும். அஜீரணம், மாந்தம் முதலியவற்றைக் கண்டிக்கும். இதனை மராட்டி மொக்கு என்றும் கூறுவர்.