
- துளசி மகத்துவம்
துளசியைப் பறித்து சுத்தப்படுத்தி செப்பு பாத்திரத்தில் குறைந்தது எட்டு மணி நேரம் ஊற வைத்து அதனை கசக்கிப் பிழிந்து எடுத்து விட்டு சிறிது பச்சைக் கற்பூரம் கலந்து அந்த நீரை நாள்தோறும் அருந்தி வந்தால் மண்ணீரல் நோய்கள் அணுகுவதில்லை. இந்தத் துளசி தீர்த்தம் மூளைக்கு சுறுசுறுப்பையும் நீண்ட ஆயுளையும் தரும். இளமையோடு வாழச் செய்யும்.
- வல்லாரை மருத்துவம்
வல்லாரைக்கீரையை துவரம் பருப்பு, மிளகு, சீரகம், வெங்காயம் இவற்றுடன் சாம்பார் செய்து சாப்பிட சரீர எரிச்சல், கீல் வலி, வீக்கம், சிறுநீர் மஞ்சளாகப் போவது எல்லாம் சரியாகும்.
- இலுப்பைப்பூ மருத்துவம்
இலுப்பைப்பூ கஷாயத்தில் பசும்பால் சேர்த்து சாப்பிட்டு வர ஆண்மைக் குறைவு நீங்கும். இலுப்பை பூக்கஷாயம் ஜூரத்தைத் தணித்து வாய்க்கசப்பை நீக்கும்.
- அருகம்புல்லின் மகத்துவம்
ஒன்றரை கிலோ அருகம்புல்லை சுத்தம் செய்து அம்மியில் வைத்து அரைத்தெடுத்து 4 லிட்டர் நீரில் கரைத்து தெளிய வைத்து நான்கு மணி நேரத்திற்குப் பிறகு நீரை இறுத்து விட்டு அடியில் தங்கும் வண்டலை காய வைத்துக் கொண்டு ஒரு சிட்டிகை தூளை தேன் விட்டுக் குழைத்து காலை, மாலை சாப்பிட்டு வர வெள்ளை. வெட்டை, மதுமேகம், தந்தி மேகம் அனைத்தும் குணமாகும். உணவில் புளி, கடுகு, நீக்க வேண்டும்.
- நாவல் பழ மருத்துவம்
நாவல் பழத்திற்கு நீரிழிவு நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் உண்டு. இப்பழத்தின் கொட்டைகளைக் காய வைத்து மேல் தோலை நீக்கி விட்டு பருப்பை மட்டும் இடித்து தூள் செய்து காலை. மாலை ஒரு கரண்டி வாயில் போட்டு வெந்நீர் குடித்து வர நீரிழிவு நோய் கட்டுப்படும்.