ஒரு பக்க விரை வாதத்துக்கு…
ஒரு விரல் அளவு வசம்பை இழைத்து 40 நாள்கள் தொடர்ந்து உண்டு வர விரைவாதம் குணமாகும்.
துரித ஸ்கலிதத்தை நிறுத்த…
தாழம்பூவின் உள்ளிருக்கும் பட்டு போன்ற பொடியை கோழி முட்டையின் வெள்ளைக் கருவுடன் குழைத்து ஆண் குறியின் மீது பூசிக் கொண்டு உடலுறவில் ஈடுபட்டால் விந்து விரைந்து வெளியேறாது. நீடித்து உறவு கொள்ளலாம்.
மலட்டுத்தனம் நீங்க…
புஸ்கள் வேரை நீர் விட்டரைத்து மாத விலக்கான மூன்றாம் நாள் உள்ளுக்கு சாப்பிட மலட்டுப் பூச்சிகள் இறந்து குழந்தை உற்பத்தியாகும்.
பால் கட்டிக் கொண்டால்…
அத்திப்பட்டை அல்லது ஆலம்பட்டையை நீரில் ஊற வைத்து இடித்து அரைத்து மார்பகத்தின் மீது தடவ குத்தல் நிற்கும். வீக்கமும் குறையும். பால் கட்டிக் கொண்டிருந்தால் கரைந்து குணமாகும்.
மலேரியா ஜுரத்துக்கு…
விராலிச் செடியின் பட்டையை நன்கு காய வைத்து தூள் செய்து காவை, மாலை 5 கிராம் தேனில் குழைத்து சாப்பிட குணமாகும்.