health tips - 2026

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: விக்கல், பல்வலி, முகப்பரு, நீர்வடிதல், உடல்தேற..!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
health tips - 2026

விக்கலுக்கு

சுக்குப் பொடியை தேனில் குழப்பி நாக்கில் தடவி சப்பி சாப்பிட விக்கல் நின்றுவிடும்.

உடல் தேற…

இளைத்தவனுக்கு கொள்ளு கஞ்சி கொடுக்கலாம். அரிசி பாதி. கொள்ளுபாதி சேர்த்து வேகவைத்த வடிகஞ்சியாக சாப்பிட உடல் தேறும் நல்ல பசி உண்டாகும். சளியை அறுக்கும். வலிமை தரும். தாது பலத்தையும் கொடுக்கும்.

மூக்கிலிருந்து நீர் கொட்டுகிறதா?

தேங்காய் நார்களை ஒரு சட்டியில் போட்டு கொளுத்தி அந்தப் புகையை உறிஞ்ச மூக்கில் நீர் கொட்டுவது நிற்கும்.

2 பச்சை வெங்காயத்துடன் 5 மிளகை வைத்து அரைத்து சாப்பிட நீர்க்கோர்வை குணமாகும். ஜூரம் இருந்தாலும் குணமாகும்.

முகப்பரு தொல்லையா?

அடிக்கடி முகத்தை சுத்தமாக சோப்பு அல்லது பயற்றமாவு கொண்டு கழுவ வேண்டும்.

முகப்பருவை கிள்ளவோ, நசுக்கவோ கூடாது. சந்தனப் பொடியை பன்னீரில் கலந்து முகத்தில் பூசி வரலாம்.

எண்ணெய், பிஸ்கட், இனிப்பு வகைகள். ஐஸ்கிரீம் சாப்பிடுவதை
தவிர்த்தல் நலம்.

மல்டி வைட்டமின் மாத்திரைகள் சாப்பிடலாம். சூடான நீரில் ஒற்றடம் கொடுக்கலாம். அல்லது தினமும் 15 நிமிடம் சூரிய வெளிச்சம் முகத்தில் படும் படி (காலை, மாலை ) வெயிலில் நிற்கலாம்.

பல் வலிக்கு…

சிறிதளவு கிராம்புத் தைலத்தை வலியுள்ள பல்லில் மட்டும் தடவ நல்ல குணம் தெரியும். கிராம்பை பொடித்தும் வைக்கலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.