லஞ்ச் பாக்ஸ் கார்னர்: வெள்ளரிக்காய் சாதம்!

Published:

Cucumber rice - 2026

வெள்ளரி சாதம்

தேவையானவை:

பச்சரிசி ஒரு கப்,
வெள்ளரித் துருவல் அரை கப்,

பச்சை மிளகாய் 4,
இஞ்சி ஒரு துண்டு,
எலுமிச்சம்பழச் சாறு ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை, பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன்,
உப்பு தேவையான அளவு.
கறிவேப்பிலை சிறிதளவு.

தாளிக்க:

கடுகு, உளுத்தம்பருப்பு தலா அரை டீஸ்பூன்,
நெய் ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

அரிசியை உப்பு சேர்த்து உதிராக வடித்துக்கொள்ளுங்கள். பச்சை மிளகாய், இஞ்சியைப் பொடியாக நறுக்குங்கள். நெய்யைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, இஞ்சி, பச்சை மிளகாய், பெருங்காயம், மஞ்சள்தூள் சேர்த்து, வெள்ளரி துருவலையும் உப்பையும் சேர்த்து, 5 நிமிடம் வதக்கி இறக்குங்கள். அந்தக் கலவையுடன் சாதம், எலுமிச்சம்பழச் சாறு சேர்த்துக் கிளறிப் பரிமாறுங்கள்.

Related articles

Recent articles

spot_img