
கோவைக்காய் சாதம்
தேவையான பொருட்கள்
உதிராக வடித்த சாதம் – 2 கப்,
பெரிய வெங்காயம் – 1,
கோவைக்காய் – 100 கிராம்,
தேங்காய்த் துருவல்,
மிளகாய்த் தூள் தலா – 2 டீஸ்பூன், எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்,
கடுகு, உளுந்து தலா – அரை டீஸ்பூன், கடலைப் பருப்பு – 1 டீஸ்பூன்,
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
கறிவேப்பிலை சிறிதளவு.
செய்முறை
வெங்காயம், கோவைக்காயை மெல்லியதாக நறுக்குங்கள். வாணலியில் எண்ணெயை காயவைத்து கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு ஆகியவற்றை தாளித்து, வெங்காயம், தேங்காயை வதக்குங்கள். பச்சை வாடை போனதும், கோவைக் காய், மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து காய் வேகும் வரை வதக்கி, கறிவேப்பிலை, எலுமிச்சை சாறு சேர்த்து இறக்குங்கள். இந்தக் கலவையோடு சாதத்தைக் கலந்து பரிமாறுங்கள்.