அப்பாச்சி தீர்வு: களைப்பு நீங்க, பிரசவவேதனை, ராஜபிளவை..!

Published:

health tips - 2026

ராஜ பிளவைக்கு….

கோவை இலை. வரட்பூலா இலை, வெண் கொடிவேலி இலை மூன்றையும் அரைத்து ராஜ பிளவையின் மீது வைத்துக் கட்டி வர சீக்கிரத்தில் பழுத்து உடையும்.

பிரசவ வேதனை குறைய…

மாலதி மலர்ச் செடியின் வேரை சுத்தம் செய்து தட்டி மோருடன் கலந்து உட்கொள்ள பிரசவ வேதனை குறையும்.

அம்மை நோயில் கண்ணில் பூ விழுந்தால்

  • அம்மை நோயின் தீவிரம் அதிகமாக இருந்து கண்ணில் பூ விழுந்து விடும் என தெரிந்ததும் பனங்குருத்தைக் கொண்டு வந்து தட்டிச் சாறு எடுத்து காலை, மாலை கண்ணில் பிழிந்து வர பூ விழுவதைத் தடுத்து விடும். இரவில் குழந்தை படுக்கையை நனைத்தால்…

இந்தப் பழக்கம் உள்ள குழந்தைக்கு எள்ளும் சிறிது முள்ளங்கியும் அரைத்து சுண்டைக்காயளவு கொடுத்து வர சிறுநீரின் அளவு குறையும். மூன்று நாள்களுக்கு ஒரு முறை கொடுத்துப் பார்த்து பக்க விளைவு ஏதேனும் ஏற்பட்டால் நிறுத்தி விடுங்கள்.

ALSO READ:  செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

களைப்பு அதிகமாக இருக்கிறதா?

வெங்காயத்தை வதக்கி சாப்பிடுங்கள். அல்லது ஆப்பிள் ஜூஸ் குடியுங்கள். களைப்பு பறந்து விடும்.

Related articles

Recent articles

spot_img