health tips - 2026

அப்பாச்சி தீர்வு: பித்தம், உடல்பலம், இருமல், ஞாபகசக்தி, ஜன்னி..!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
health tips - 2026

ஜன்னி சரியாக…

வெள்ளைப்பூண்டு, கடுகு, இஞ்சி, முருங்கைப் பட்டை. இவற்றைச் சம அளவு எடுத்து மைபோல் அரைத்து இடதுகாலின் பெருவிரலில் வைத்து கட்டுப்போடவும். இதனையே உச்சந்தலையிலும் வைத்து தேய்க்க ஜன்னி குணமாகும்.

உடல் பலம் பெற…

பச்சை நிலக்கடலையை நீர் சேர்த்து அரைத்து பாலெடுத்து ஒரு டம்ளர் பாலுடன் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வர உடல் பலம் பெறும்.

ஞாபக சக்திக்கு…

லவங்கப்பட்டை, சுக்கு, இரண்டையும் பொடித்து வெந்நீரில் கொதிக்க விட்டு காலை, இரவு பருகி வர ஞாபகசக்தி அதிகரிக்கும்.

சிறிது வெல்லம் சேர்த்து வெங்காயம் சாப்பிட பித்த உபாதைகள் நீங்கும்.

அதிகாலை இருமலுக்கு…

கடுகை நன்றாக இடித்து ஒரு சிட்டிகைத் தூளை ஒரு ஸ்பூன் தேனில் குழைத்துச் சாப்பிட்டு வர இருமல் மறையும்.

உலோகத்தினால் மருத்துவம்

செம்பு உடலின் மீது படுவதால் இரத்த ஓட்டம் முன்னேற்றம் அடையும். கீழ் வாயு நோய்கள் ஏற்படாது. எனவேதான் சிலர் கைகளில் செம்பு வளையம். மோதிரம் போன்றவற்றை அணிகின்றனர்.

ALSO READ:  உங்களால் இந்த தேசத்துக்கு என்ன ஆதாயம் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.