அப்பாச்சி தீர்வு: படை, உடல்வலி, சோர்வு, உடல்நீர், குரல் இனிமை…!

Published:

health tips - 2026

படை குணமாக…

ஒரு சிறு கட்டி நவச்சாரத்தை பொடித்து தேன் சேர்த்துக் குழப்பி ஒரு பீங்கான் கோப்பையில் வைத்துக் கொண்டு தினசரி படையின் மீது தடவி வர படை உதிர்ந்து விடும். சரும நோய்களுக்கு முக்கிய காரணம் சுத்தமின்மையே. உடல் சுத்தத்துடன் குடல் சுத்தமும் வேண்டும்.

உடம்பு வலியா?

வாய்வுக் கோளாறு தான் இதற்குக் காரணம். சுக்கு, மிளகு, திப்பிலி, அக்கரா, சித்திரத்தை இவற்றை சம அளவு எடுத்து இடித்து பனைவெல்லம் சேர்த்துக் கஷாயம் வைத்து சாப்பிட உடல் வலி மறையும். உடலிலுள்ள வாயுவும் அகலும். உணவில் அடிக்கடி பூண்டு சேர்த்து வந்தால் உடவில் வாய்வு சேராது.

உடலில் நீர் சேர்ந்து விட்டதா?

இதற்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம். காலையில் எழுந்தவுடன் உடல் வியர்க்க வியர்க்க ஏதாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதோடு காலை வெறும் வயிற்றில் ஓர் எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து சிறிது உப்பு சேர்த்துக் குடிக்கவும். சாப்பாட்டில் அடிக்கடி வாழைத்தண்டு சேர்த்துக் கொண்டாலும் நீர் இறங்கும். மாலையில் ஒரு டம்ளர் தண்ணீரில் இரண்டு ஸ்பூன் தேன் கலந்து குடிக்கலாம். உடலிலும் நீர் இறங்கி உடம்பு மெலியும்.

ALSO READ:  சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

குரல் இனிமைக்கு…

தேனில் ஊற வைத்த திப்பிலியை வாயில் அடக்கி வர குரல் இனிமையாகும்.
வெங்காயத்தை பச்சையாக மென்று தின்று வர குரல் இனிமையாகும்.

Related articles

Recent articles

spot_img