தமிழக கவர்னரை திரும்ப பெறக்கோரி மக்களவையில்திமுக எம்பிக்கள் வெளிநடப்பு..

தமிழக கவர்னரை திரும்ப பெறக்கோரி மக்களவையில் திமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இன்றைய கூட்டத்தின்போது, அது குறித்து விவாதிக்க அனுமதிக்காததால், திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.

தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்றதும், சட்டப்பேரவையில் நீட் விலக்கு கோரி தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை. சில விளக்கங்கள் கேட்டு கவர்னர் அந்த மசோதாவை திரும்ப அனுப்பி வைத்தார்.

இதையடுத்து மீண்டும் சிறப்பு சட்டமன்ற கூட்டம் கூட்டப்பட்டு, நீட் விலக்கு மசோதா நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், அதை அவர் இன்னும் ஒப்புதல் வழங்காமல் இழுத்தடித்து வருகிறார். சமீபத்தில் பட்ஜெட் பதில் உரையில் பேசிய போது  நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 19 சட்டங்கள் ஆளுநர், குடியரசுத் தலைவர் ஏற்காத காரணத்தால் முடங்கி உள்ளது என்று குறிப்பிட்டு பேசினார்.

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

 இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து வலியுறுத்தி வந்துள்ளார். ஆனாலும் ஆளுநர் ஆர்.என்.ரவி குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு இன்னும் அனுப்பாமல் இழுத்தடித்து வருகிறார். இந்த பரபரப்பான சூழலில்தான், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வேண்டும் என்று பாராளுமன்றத்தில் திமுக நோட்டீஸ் வழங்கி உள்ளது.நாடாளுமன்ற உறுப்பினர்கள் முக்கியமான விவகாரங்கள் குறித்து விவாதிக்க  கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் வழங்க 197 விதியின் கீழ் அதிகாரம் உள்ளது.  இந்த விதியைப் பயன்படுத்தி இன்றைய தினம் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர்  டி.ஆர் பாலு தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை திரும்பப்பெற வேண்டுமென கவன  ஈர்ப்பு தீர்மானம் நோட்டீஸ் வழங்கியுள்ளார்.

அகில இந்திய மருத்துவ  கல்விக்கான நுழைவுத் தேர்வில் (நீட்) இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க  கோரி தமிழக சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு அவை ஆளுநருக்கு அனுப்பப்பட்டிருந்தது. இருப்பினும் நீண்ட காத்திருப்புக்கு பிறகு  மசோதாவை மீண்டும் தமிழக அரசுக்கு அனுப்பி இருந்தார்.இந்நிலையில்  சமீபத்தில் சிறப்பு சட்டமன்றக் கூட்டத் தொடர் கூட்டப்பட்டு அதிலும்  மீண்டும் நீட் தேர்வில் விலக்கு அளிக்க கோரி மசோதா நிறைவேற்றப்பட்டு  ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் நடைபெற்று வரும் நாடாளுமன்ற  பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வில், நீட் தேர்வில் விலக்கு அளிக்க  கோரி தமிழக அரசு ஆளுநரிடம் வழங்கிய மசோதா இதுவரை உள்துறை அமைச்சகத்திற்கு  கிடைக்கப் பெறவில்லை எனவும் உள்துறை அமைச்சகத்திற்கு கிடைக்கப் பெற்றால்  தான் அவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும் என உள்துறை அமைச்சகம்  தெரிவித்து இருந்தது.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

 இந்நிலையில் நீட் உள்ளிட்ட 3 மசோதாக்கள்  கிடப்பில் வைத்துள்ள தமிழக ஆளுநரை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் எனவும்  அவை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் எனவும் திமுக மக்களவை  உறுப்பினரும் குழு தலைவருமான டி.ஆர்.பாலு நோட்டீஸ் வழங்கியுள்ளார்.இந்நிலையில்,  ஆளுநரை திரும்பற பெற வேண்டும், நீட் தேர்வு குறித்த சட்டமன்ற தீர்மானத்தை  குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தும் ஆளுநர் குறித்து விவாதிக்க வேண்டும் என்று லோக்சபாவில் திமுக உறுப்பினர்கள் வலியுறுத்தினர். ஆனால் சபாநாயகர் இப்போது இதுபற்றி விவாதிக்க முடியாது என்று கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Nagaland Governor RvRavi PTI - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories